Home அரசியல் முதல்வர் மீது வழக்கு தொடருவோம் டி.டி.வி. தினகரன் தகவல்

முதல்வர் மீது வழக்கு தொடருவோம் டி.டி.வி. தினகரன் தகவல்

10
0
SHARE

சென்னை, செப். 14&

மைசூரில் உள்ள எனது ஆதரவு எம்.எல்.ஏக்களை மிரட்டியதால் காவல் துறையினர் மீதும், காவல்துறை அமைச்சகத்தை வைத்திருக்கும் முதல்வர் மீதும் வழக்கு தொடர உள்ளோம் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு டி.டி.வி. தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மைசூரிலிருந்து பேசினார்கள். தமிழ்நாட்டிலிருந்து 5 டி.எஸ்.பி தலைமையில் 30 காவல்துறையினர் அங்கு சென்றுள்ளர். அங்கு சென்று  எம்.எல்.ஏக்களை மிரட்டுகின்றனர். உங்களுக்கு 20 கோடிபணம் கூட தருகிறோம். நீங்கள் எடப்பாடி அணிக்கு ஆதரவு தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இல்லை என்றால் உங்கள் மீது வழக்குகள் போடுப்படும் என்று மிரட்டியுள்ளார்கள். மேலும் அங்கு உள்ள காவல் நிலையிலையத்தில் இது குறித்து அவர்கள் வழக்கு தொடர உள்ளனர். அவர்களை மிரட்டிய காவல் துறையினர் மீதும், காவல் துறை அமைச்சராக இருக்ககூடிய முதல்வர் மீதும். என் மீதும் நடிகர் செந்தில் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளனர். திருச்சி சி..டி. பிரிவில் வழக்கு உள்ளது என நினைக்கிறேன்.

பொதுவாக என்னை பார்த்து  விட்டு வெளியே வருபவர்கள் பேட்டியளிப்பது வழக்கம். அன்று  கழகத்திலே பொறுப்பு வழங்கிய பின் செந்தில் பேட்டியளித்துள்ளார். அவர்என்னகூறினார்என்றுகூடநான்

பார்க்கவில்லை. ஆனால் அவரை நான்தூண்டிவிட்டதாக என் மீது வழக்கு போட்டுள்ளனர். நான் வழக்குக்கு பயந்து இதை கூறவில்லை அவர்கள் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்துள்ளனர் என்பதை கூறுகிறேன். எனவே மிரட்டும் காவல் துறையினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து காவல்துறையை அனுப்பியது யார் என்று காவல் துறையை வைத்திருக்கக்கூடிய முதல்வர் மீதும் வழக்குபோடுவோம் சிலிப்பர் செல்லைப்பற்றி இப்பொழுது எதுவும் கூறமுடியாது, ஆட்சி அமைக்க 117 எம்.எல்.ஏக்கள் வேண்டும். தற்பொழுதே அவர்கள் மெஜாரிட்டியை இழந்து விட்டார்கள். 21 எம்.எல்.ஏக்கள் எங்களிடம் இருப்பது அனைவரும் தெரிந்த உண்மையே. ஆளுநர் என்னிடம்  நேரம் கேட்டுள்ளார்.

14ம் தேதிவரை பொறுத்திருந்து பார்த்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுவோம். கோர்ட்டினுடைய தீர்ப்பிற்கு பிறகே அது பொதுக்கூட்டமா இல்லைய என்பது தெரியும். யார் யாரையோ எல்லாம் அழைத்து பொதுக்குழுவை நடத்தியுள்ளனர். அவர்கள் எல்லாம் அம்மா அணியில் உள்ளார்கள் என்பதே தெரியவில்லை. அவர்கள் அனைவரும் எடப்பாடி ஆட்சியில் உள்ளவர்கள் தானே தவிர அம்மா அணியில் இருநது யாரும் செல்லவில்லை. எங்கள் கட்சியின் சட்டத்திட்டப்படி பொதுக்குழுவை பொதுச்செயலாளரே கூட்டவேண்டும். இல்லை என்றால் 500 பொதுக்குழு உறுப்பினர்கள் சென்று ஒப்புதல் பெற வேண்டும். .பி.எஸ், மதுசூதனன் போன்றோர் ஏற்கனவே கட்சியை விட்டு நீக்கிய பிறகு அவர்கள் எவ்வாறு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆவார்கள். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருப்பதற்கு கட்சியின் தொண்டர்களும் மக்களும் விரும்பவில்லையே பதவியை ரஜினாமா செய்யவேண்டியது தானே  கோர்ட்டின் தீர்ப்பின் படி அவர்கள் எடுக்கும் எந்த முடிவிற்கும் சட்டப்படி உயிர் கிடையாது.

சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து தான் எதையும் கூற முடியும். நான் எங்கு சென்றாலும் ஆட்சியைக்

கலைத்விடுங்கள் என்று மக்கள் கூறுகிறார்கள் என்றும் ஆளுநரிடம் கூறியுள்ளேன். .தி.மு.க தொண்டர்களின் விருப்பமும் இதுதான் என்பதை தெளிவாக கூறியுள்ளேன்.

எங்களுடைய கட்சியைக்காக்க எந்த எல்லைக்கும் செல்லுவேன். தி.மு.க எங்களின் முக்கியமான அரசியல் எதிரிகள் எவ்வாறு அவர்களுடன் செல்ல முடியும்.இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here