Home சம்பவம் திருத்தணியில் தி.மு.க. தலைமையில் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருத்தணியில் தி.மு.க. தலைமையில் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

10
0
SHARE

திருத்தணி, செப். 14&

நீட் தேர்வுக்கு  எதிர்ப்பு தெரிவித்து தி.மு.. தலைமையில் எதிர்கட்சிகள் சார்பில் திருத்தணியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

மருத்துவப் படிப்பில் சேர மத்திய அரசின் சி.பி.எஸ். கல்வி திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படுவதால் மாநில கல்வி முறை திட்டத்தில் படித்த மாணவ மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந் நிலையில்  அரியலூர் மாணவி அனிதா பிளஸ்&டூ பொதுத்தேர்வில்  அதிக மதிப்பெண் பெற்று மருத்துவப்படிப்பு சேர தகுதிபெற்றும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத வேதனையில் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்ப்படுத்தி  மாணவர்கள், அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீட் தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.. சார்பில்  எதிர்கட்சிகள் நேற்று  தமிழகம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தணியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர தி.மு.. செயலாளர் எம்.பூபதி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ஜி.ரவீந்திரா, ஆர்த்தி ரவி ஆகியோர் வரவேற்றனர்.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.. செயலளார் பூண்டி கி.வேணு தலைமையில்  காங்கிரஸ் மாவட்ட தலைவர் சிதம்பரம், சிபிஐ,சிபிஎம், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், உட்பட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், திரளாக தி.மு.. வினர்  மாணவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், தமிழக மாணவர்களின் மருத்துவப்படிப்பை பாதிக்கும் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here