Home தமிழகம் காண்ட்ராக்டர் சுப்பிரமணியன் மரண வழக்கு முன்ஜாமீன்கோரி மாஜி அமைச்சர் பழனியப்பன் மனு

காண்ட்ராக்டர் சுப்பிரமணியன் மரண வழக்கு முன்ஜாமீன்கோரி மாஜி அமைச்சர் பழனியப்பன் மனு

13
0
SHARE

சென்னை, செப். 14&

நாமக்கல்காண்ட்ராக்டர்சுப்பிரமணியன்மரணவழக்கில்முன்ஜாமீன்கோரிமுன்னாள்அமைச்சர்பழனியப்பன்சென்னைஉயர்நீதிமன்றத்தில்மனுத்தாக்கல்செய்துள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேநாளில் நாமக்கல் கான்டிராக்டர் சுப்பிரமணியன் வீட்டிலும் சோதனை நடந்தது.இதனைத் தொடர்ந்து சில நாட்களில் தமது பண்ணை வீட்டி சுப்பிரமணியன் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் கூறப்பட்டது. இருப்பினும் சுப்பிரமணியன் மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் சி.பி.சி..டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.சுப்பிரமணியன் எழுதி வைத்ததாக கூறப்படும் கடிதத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதனால் சி.பி.சி..டி. போலீசார் பழனியப்பனிடம் ஏற்கனவே விசாரணை நடத்தினர்.

தற்போது மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று பழனியப்பனுக்கு சி.பி.சி..டி போலீசார் சம்மன் அனுப்பினர். தினகரன் முகாமில் இருக்கும் பழனியப்பனோ கர்நாடகாவின் கூர்க் ரிசார்ட்டில் முகாமிட்டிருந்தார்.இதனால் தமிழக போலீசார் கூர்க் ரிசார்ட் சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் பழனியப்பன் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here