Home மற்றவை இந்திய வங்கிகள் பேசல்&3 விதிகளை அமல்படுத்த ரூ. 4 லட்சம் கோடி தேவை சர்வதேச...

இந்திய வங்கிகள் பேசல்&3 விதிகளை அமல்படுத்த ரூ. 4 லட்சம் கோடி தேவை சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனம் கணிப்பு

7
0
SHARE

புதுடெல்லி, செப். 14&

இந்திய வங்கிகள் பேசல்&3 விதிமுறைகளை அமல்படுத்த 4 லட்சம் கோடி தேவை என சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமாக பிட்ச் ரேட்டிங்ஸ் கணித்துள்ளது.

2008&ம் ஆண்டு அமெரிக்க வங்கி திவால் ஆனது. இதைதொடர்ந்து பேசல்&3 சர்வதேச விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. இந்த விதிகள் 2019&ம் ஆண்டு மார்ச் மாதம் நடைமுறைக்கு வர உள்ளது.

இதற்கு வங்கிக்கு பெருமளவு பணம் தேவைப்படுகிறது. இந்த பண தேவைக்காக முக்கியமில்லாத சொத்துகளை விற்பது என வங்கிகள் திட்டமிட்டு உள்ளன. மேற்கொண்டு பண தேவைக்காக மத்திய அரசையும் நாட உள்ளன.

இந்த நிலையில் பேசல்&3 விதிமுறைகளை இந்தியாவில் நடைமுறைப்படுத்த வங்கிகளுக்கு 4 லட்சம் கோடி தேவைப்படும் என்று சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமாக பிட்ச் ரேட்டிங்ஸ் கணித்துள்ளது.

மேலும் இந்திய வங்கிகள் குறைவான மூலதனத்தை கொண்டுள்ளது எனவும், இது முக்கிய பிரச்சினையாக உருவெடுக்கும் எனவும் பிட்ச் கூறுகிறது.

மற்றொரு தர மதிப்பீட்டு நிறுவனமாக மூடிஸ், பேசல்&3 விதிமுறைகளை இந்திய வங்கிகள் நடைமுறைப்படுத்த 6 லட்சம் கோடி தேவை என கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here