Home இந்தியா பங்கு வர்த்தக நேரம் நீட்டிக்கப்படுமா?செபி பரிசீலனை

பங்கு வர்த்தக நேரம் நீட்டிக்கப்படுமா?செபி பரிசீலனை

14
0
SHARE

புதுடெல்லி, செப். 14&

பங்கு வர்த்தக நேரத்தை நீட்டிப்பது குறித்து, பங்கு கட்டுப்பாட்டு வாரியமான செபி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய பங்கு சந்தைகள் காலை 9 மணிக்கு வர்த்தகத்தை துவக்குகின்றன. மாலை 3.30 மணிக்கு வர்த்தகம் நிறைவடைகிறது. இந்த கால நேரத்தை, சர்வதேச வர்த்தக நேரத்திற்கு ஏற்றால்போல் மாலை 5 மணி வரை நீட்டிக்க வேண்டும் என, முன்னர் கோரிக்கை எழுப்பப்பட்டது.

இத்திட்டத்திற்கு பங்கு தரகு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இத்திட்டம் வேறு வழியின்றி கைவிடப்பட்டது. இந்த நிலையில் வர்த்தக நேரத்தை நீட்டிப்பது குறித்து செபி தற்போது பரிசீலித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

பங்கு சந்தைகள் உயர்வுடன் காணப்படும் இச்சமயத்தில், வர்த்தக நேரத்தை உயர்த்துவது சரியான தருணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த முடிவை செபி தன்னிச்சையாக மேற்கொள்ளாது. மத்திய அரசு மற்றும் பாரத ரிசர்வ் வங்கியுடன் கலந்து ஆலோசித்த பின்னரே முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here