Home விளையாட்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா 4&1 என்ற கணக்கில் வெல்லும் வி.வி.எஸ். லெட்சுமணன்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா 4&1 என்ற கணக்கில் வெல்லும் வி.வி.எஸ். லெட்சுமணன் நம்பிக்கை

11
0
SHARE

புதுடெல்லி, செப். 14&

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை, விராத் கோலி தலைமையிலான இந்திய அணி 4&1 என்ற கணக்கில் வென்று அசத்தும் என்று முன்னாள் வீரர் வி.வி.எஸ். லெட்சுமணன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

வங்கதேச டெஸ்ட் தொடரை முடித்த கையோடு, ஆஸ்திரேலியா இந்திய அணியுடனான தொடருக்கு தயாராகி விட்டது. முதல் ஒருநாள் கிரிக்கெட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 17&ந் தேதி நடக்கிறது.

இந்த நிலையில் வி.வி.எஸ். லெட்சுமணன், இந்திய அணி 4&1 என்ற கணக்கில் வென்று அசத்தும் என்றுள்ளார். மேலும் ஆஸ்திரேலியா பவுலர்களால் இந்திய மைதானத்தில் சோபிக்க முடியாது என்ற அவர் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார். வி.வி.எஸ். லெட்சுமணனின் இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிளார்க், 3&2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றும் என்று ஆரூடம் கூறியுள்ளார்.

மேலும் ஸ்மித், விராத் கோலி ஆகியோரில் யார் அதிக ரன் குவிப்பார்கள் என்பது முக்கியமில்லை என்று இறுதியில் வெற்றியை யார் பதிவு செய்வார்கள் என்பதே முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here