Home இந்தியா கடந்த மாதத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பால், பணவீக்கம் உயர்வு

கடந்த மாதத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பால், பணவீக்கம் உயர்வு

13
0
SHARE

புதுடெல்லி, செப். 14&

கடந்த மாதம் (ஆகஸ்ட்) சில்லறை பணவீக்கம் ஒரு சதவீதம் உயர்ந்துள்ளது மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பிரதமர்நரேந்திரமோடியின்உயர்மதிப்பிலானரூபாய்நோட்டுகள்செல்லாதஅறிவிப்புக்குபின்னர், வளர்ச்சி துறையில் தொழில் துறை சரிவை சந்தித்தது. இது துவக்கம் என்ற போதிலும், வருங்காலங்களில் வளர்ச்சி விகிதம் அதிகரித்து காணப்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர்.

அதேபோல் ஜூன் மாதத்தில் தொழில் துறை உற்பத்தி 1.2 சதவீதம் வளர்ச்சி கண்டது. இருப்பினும் ஜூலை மாதம் 0.1 சதவீதம் சரிவை கண்டது. உற்பத்தி துறையை பொறுத்தமட்டில் இது கடந்த 48 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியாகும்.

இந்த பின்னடைவில் இருந்து தொழில் துறை தற்போது மீண்டு வருகிறது. இதற்கு சுரங்கம் மற்றும் மின் துறைகள் குறிப்பிட்ட பங்களிப்பை அளித்ததே காரணமாகும்.

சுரங்க துறை உற்பத்தி 4.8 சதவீதமாக உள்ளது. அதில் மின் உற்பத்தி 6.5 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில் நாட்டின் சில்லறை பணவீக்கம் ஒரு சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

காய்கறிகள், பழங்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலை உயர்வால் சில்லறை பணவீக்கம் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஒரு சதவீதம் உயர்ந்துள்ளது. பழங்கள், காய்கறிகள் பணவீக்கம் முறையே 5.29 சதவீதம் மற்றும் 6.16 சதவீதமாக உள்ளது.

இவை ஜூலையில் முறையே 2.83 சதவீதம் மற்றும் மைனஸ் 3.57 சதவீதமாக இருந்தது. அதேநேரத்தில் உணவு தானியங்கள், சமையல் எண்ணெய் மற்றும் இறைச்சி பொருட்கள் மீதான பணவீக்கம் 3.87, 1.03 மற்றும் 2.94 சதவீதமாக குறைந்துள்ளது.

எனினும் துரித உணவுகள், நொறுக்கு தீனிகள் மற்றும் இனிப்பு வகைகள் ஆகியவற்றின் பணவீக்கம் 0.43 சதவீதத்தில் இருந்து 1.96 சதவீதமாக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here