Home மற்றவை நடுரோட்டில் அரசு பெண் ஊழியர் தீ குளித்து தற்கொலை

நடுரோட்டில் அரசு பெண் ஊழியர் தீ குளித்து தற்கொலை

10
0
SHARE

கும்மிடிப்பூண்டி, செப். 14&

கும்மிடிப்பூண்டி அருகே நடுரோட்டில் அரசு பெண் ஊழியர் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட தகராறில் தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு செந்தில்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரது மனைவி லட்சுமி (29).

லட்சுமிசென்னைஎழிலகத்தில்உள்ளபிற்பட்டோர்நலத்துறைஅலுவலகத்தில்அலுவலகஊழியராகபணிபுரிந்துவந்தார். இவர் கடந்த 6 மாத்திற்கு முன்பு காதலித்து முருகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதை அடுத்த கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அஸ்தினாபுரத்தில் உள்ள விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்திருந்தார்.

நேற்றுமுன்தினம்கும்மிடிப்பூண்டியைஅடுத்தபாதிரிவேடுசெந்தில்பாக்கத்தில்உள்ளகணவர்வீட்டிற்குவந்தார். அப்போது கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் லட்சுமி வீட்டில் இருந்து வெளியே சென்று நடுரோட்டில் நடந்து சென்ற போது தனது கைபையில் இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீ கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து தீயை உடனடியாக அணைத்தனர்.

ஆபத்தான நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு பொதுமருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

நேற்று காலை சிகிச்சை பலனின்றி  லட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here