Home சம்பவம் அரக்கோணத்தில் வீடுபுகுந்து 200 சவரன் நகை கொள்ளை?

அரக்கோணத்தில் வீடுபுகுந்து 200 சவரன் நகை கொள்ளை?

11
0
SHARE

அரக்கோணம், செப். 14&

அரக்கோணத்தில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அரக்கோணம் வின்டர்பேட்டையில் வசித்துவருபவர் கவுரிநாதன் (65).

இவர் தனது மனைவியுடன் நேற்று காலை சென்னையில் தங்கி வேலை செய்துவரும் தனது மகளை பார்பதற்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பினார். கதவை திறக்கமுயன்றபோது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த புடவைகள் பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தது

உடனடியாக அவர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசாரிடம் 200 சவரன் நகை 2 கிலோ வெள்ளி பொருட்கள் 48 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து டி.எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமையில் உள்ள தனிப்படையினர் வீடு முழுவதும் சோதனையிட்டதில் கொள்ளையர்களிடமிருந்து தப்பிய வேறு சில இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சில நகைகள் கிடைத்தன.

அதுவும் சுமார் 50 சவரனுக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நகைகளைபுடவைமடிப்புகள்சிலசிறியபெட்டிகள்எனபலஇடங்களில்வைத்திருந்ததால்போலீசாரின்தேடுதல்வேட்டையில்சிலநகைகள்கிடைத்திருப்பதால்மொத்தநகையின்மதிப்பைஆராய்ந்துவருகின்றனர்.

இது குறித்து தடவியல் நிபுனர்கள் மற்றும் மோப்பநாய் வரவைத்து தீவிர விசாரனையில் தனிப்படையினர் ஈடுபட்டு கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.