Home சுடச்சுட சசிகலா கணவர் நடராஜனுக்கு விரைவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

சசிகலா கணவர் நடராஜனுக்கு விரைவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

21
0
SHARE

சென்னை, செப். 14&

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடராஜன் உடல்நிலையை லண்டன் டாக்டர் தீவிரமாக கண்காணித்து வருகிறார். அவரது உடல்நிலை குறித்து ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:

நாள்பட்ட நோய் காரணமாக அவருக்கு கல்லீரல் செயல் இழந்ததுடன், சிறுநீரகமும் செயலிழந்து, நுரையீரலில் நீர்கோர்த்துள்ளது. இதனால் பல உறுப்புகள் செயல் இழப்பு ஏற்பட்டு திடீரென்று மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. தொடர் சிகிச்சைக்கு பின்னர் தற்போது அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது. அவருக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை அவசரமாக தேவைப்படுகிறது.

இதற்காகஉறுப்புதானகாத்திருப்போர்பட்டியலில்அவருடையபெயர்சேர்க்கப்பட்டுஉள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம். இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.