Home தலையங்கம் வழக்குகளைவிரைந்து முடிக்க வேண்டும்

வழக்குகளைவிரைந்து முடிக்க வேண்டும்

14
0
SHARE

இ ன்று இந்தியா முழுவதுமே கீழ் கோர்ட்டு, மேல்கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு என்று எல்லா கோர்ட்டுகளிலும் பல்லாயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. பொதுமக்களால் தொடரப்படும் வழக்குகளை விட அரசியல் வாதிகளால் தொடரப்படும் வழக்குகள் வேண்டுமென்றே சின்ன சின்ன விஷயங்களுக்காக பல்வேறு வழக்குகள் தள்ளிப்போடப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் 31 மாவட்டங்களில் நுகர்வோர் நீதிமன்றங்கள் உள்ளன. மாநில குறைதீர் ஆணையம் சென்னையிலும், இதன் கிளை மதுரையிலும் உள்ளது. கூடுதல் விலை, காலாவதியான பொருட்கள் விற்பனை, அரசு மற்றும் தனியார் சேவைகுறைபாட்டால் பாதிக்கப்படுவோர் நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு மற்றும் நிவாரணம் பெற்று வருகின்றனர்.

ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் இந்த நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. ரூ. 20 லட்சத்துக்குள் நிவாரணம் பெற மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம். ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை நஷ்ட ஈடு கேட்டு தொடரப்படும் வழக்குகளை மாநில நுகர்வோர் ஆணையம் விசாரிக்கும்.இப்படி தொடரப்படும் வழக்குகளை 90 நாட்களுக்குள் விசாரித்து முடித்துவைக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தொடங்கிய காலம் முதல் 1 லட்சத்து 16 ஆயிரத்து 173 வழக்குகள் தொடரப்பட்டு 1 லட்சத்து 7 ஆயிரத்து 91 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. மாநில குறைதீர் ஆணையத்தில் தொடரப்பட்ட 28 ஆயிரத்து 214 வழக்குகளில் 24 ஆயிரத்து 616 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. நுகர்வோர் நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகளை உடனடியாக விசாரித்து தீர்ப்புகூற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் என்று பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவோர் ஜாமினில் வெளியே வந்து பல ஆண்டுகள் வாய்தா வாங்கியே தண்டனையில் இருந்து தப்பி, சிறைச்சாலைக்கு செல்லாமலேயே  வாழ்நாளை வெளியிலேயே கழித்து விட்டு கடைசியில் இறந்தே விடுகின்றனர்.

ஆகவே மத்திய அரசு நீதிபதிகள் கொண்ட  ஒரு குழுவை அமைத்து குற்ற வாளிகளுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்க நடவடிக்கை எடுத்தால் குற்றங்கள் குறைய வாய்ப்பு அதிகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here