Home மற்றவை அலகாபாத் பெயரை ‘பிரயாக்ராஜ்’ எனமாற்றவேண்டி உ.பி. முதல்வரிடம் சாதுக்கள் வலியுறுத்தல்

அலகாபாத் பெயரை ‘பிரயாக்ராஜ்’ எனமாற்றவேண்டி உ.பி. முதல்வரிடம் சாதுக்கள் வலியுறுத்தல்

8
0
SHARE

புதுடெல்லி, செப். 14 &

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தின் பெயரைபிரயாக்ராஜ்என மாற்ற வேண்டி அகில இந்திய அகாடா பரிஷத் (அகில இந்திய சாதுக்கள் சபை) வலியுறுத்தியுள்ளது. இதை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

.பி.யின் தெய்வீக நகரங்களில் ஒன்றாக இருப்பது அலகாபாத். கங்கை, யமுனை மற்றும் பூமிக்கு அடியில் ஓடுவதாகக் கருதப்படும் சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகள் கலக்கும் திரிவேணி சங்கமம் இங்கு உள்ளது. பிரயாக்ராஜ் என்றிருந்த இதன் பெயரை முகலாயப் பேரரசர் அக்பர் 1580ம் ஆண்டுஅல்லா பாத் (அல்லாவின் நகரம்)’ என மாற்றியுள்ளார்.அப்போது வளமும் செழிப்பும் மிகுந்து இருந்ததால் அது அல்லாவின் நகரமாக மாற்றப்பட்டுள்ளதாக காரணம் கூறப்பட்டது. அன்று முதல் அந்நகரம் அலகாபாத் என அழைக்கப்பட்டாலும் அங்கு பாரதிய ஜனதா ஆட்சி அமையும் போதெல்லாம் அதன் பெயரை பிரயாக்ராஜ் என மாற்றிப் பெயரிட வேண்டும் என கோரப்பட்டு வருகிறது.

.பி.யில் நடைபெறும் பா..க ஆட்சியின் காரணமாக மீண்டும் இந்த கோரிக்கை  எழுப்பப்பட்டது. இதை அகில இந்திய சாதுக்கள் சபையினர் முதல்வர் யோகியை சந்தித்து வலியுறுத்தினர். போலி சாதுக்கள் பட்டியலை முதல்வரிடம் ஒப்படைத்து அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய போது இந்த கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 13 அகாடாக்களை சேர்ந்த 26 சாதுக்கள் கலந்து கொண்டனர். இதற்கு சாதுக்கள் சபையின் தலைவர் மஹந்த் நரேந்தர கிரி தலைமை வகித்தார்.இது குறித்து செய்தியாளர்களிடம் மஹந்த் நரேந்தர கிரி கூறுகையில், ”அலகாபாத்தின் பெயரை பிரயாக்ராஜ் என மாற்றும் எங்கள் கோரிக்கையை முதல்வர் ஏற்றுக் கொண்டார்.

ஏற்கெனவே அலகாபாத்தின் பெயரை பிரயாக்ராஜ் என மாற்றும் முயற்சி, 2001ல் உ.பி முதல்வராக ராஜ்நாத் சிங் இருந்தபோதும் எழுந்தது. அப்போது அம்மாநிலத்தின் ஆளுநராக இருந்த விஷ்ணுகாந்த் சாஸ்திரியும் பெயர் மாற்றத்திற்கு ஆதரவாக இருந்தார். ஆனால், வேறுசில காரணங்களால் இந்த முயற்சி தடைபட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு மீண்டும் அமைந்த பா..க ஆட்சியில் முகலாயப்பேரரசர்கள் ஆட்சியின் பெயர்களை மாற்றும் முயற்சி மீண்டும் துவங்கி விட்டது. கடந்த ஆகஸ்டில், .பி.யின் முக்கிய ரயில் சந்திப்பானமுகல் சராய் ஜங்ஷன்பெயரை, ‘தீன் தயாள் உபாத்யாஎன மாற்ற முடிவு செய்யப்பட்டது. இவர், பா..கவின் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கின் நிறுவனர் ஆவார்.இதேபோல் உ.பி.யின் மேற்கு பகுதியில் உள்ள, மதக்கலவரத்திற்கு பெயர் பெற்ற நகரான அலிகர் பெயரைஹரிகர்என மாற்ற இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இங்கு, சர் சையது அகமது கானால் 1875ம் ஆண்டு நிறுவப்பட்டு புகழ்பெற்று விளங்கும் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here