Home தமிழகம் தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக வரலாறு இல்லைஆர்.எஸ்.பாரதி பேச்சு

தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக வரலாறு இல்லைஆர்.எஸ்.பாரதி பேச்சு

55
0
SHARE

காஞ்சிபுரம், செப். 14&

நீட் தேர்வில் விலக்கு அளிக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நேற்று  நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். திமுக நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் வரவேற்றார். காங்கிரஸ் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் ஜி.வி. மதியழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் பு.பெ.கலைவடிவன், சூ..ஆதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சங்கர்,   சிஐடியு மாவட்ட செயலாளர் முத்துக்குமார், .கம்யூனிஸ்ட் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒய்.எம்.நாராயணசாமி, மாவட்ட துணைத்தலைவர் பி.வி.சீனுவாசன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஷாஜகான், திராவிடர் கழகம் சார்பில் கோவிந்தசாமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் காஞ்சி தீனன், திமுக மாவட்ட பொருளாளர் சுகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், இரா.நாகன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நகர செயலாளர் அமீர் ஜான், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் தாஜ்தீன், திமுக விவசாய அணி எழிலன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது

மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு கொடுமையை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் அதிக மதிப்பெண் பெற்ற அரியலூர் மாணவி அனிதாவை நீட் தேர்வு காவு வாங்கியுள்ளது.

தற்போதையபிரதமர் 3 முறை முதல்வராக இருந்த வளர்ந்த மாநிலமாக பாஜகவினர் கூறிக்கொள்ளும் குஜராத் மற்றும் தற்போது பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் ஒரு மருத்தவக் கல்லூரிகூட கிடையாது. ஆனால், தமிழகத்தில் 24 மருத்துவக்கல்லூரிகள் 4500 மருத்துவப் படிப்பு சீட்டுகள் உள்ளது.

இதனைக் கணக்கில் கொண்டே நீட் தேர்வை தமிழகத்தில் புகுத்தி தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு வாய்ப்பை மத்திய பாஜக அரசு சீரழித்துள்ளது. பிரிட்டீஷ் இளவரசிக்கு மருத்துவம் பார்த்ததே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த லட்சுமண முதலியார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியபோது திருச்சியில் சின்னசாமி என்பவர் தீக்குளித்ததே போராட்டம் தீவிரமடையக் காரணமாக இருந்தது. அதேபோன்று அரியலூர் மாணவி அனிதா உயிர்த்தியாகமே நீட் எதிர்ப்புப் போராட்டம் அனைத்துத் தரப்பு மக்களையும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ், தமிழர்களுக்கு துரோகம் செய்த யாரும் நன்றாக இருந்ததாக சரித்திரம் இல்லை. அதேபோலத்தான் தமிழர்களுக்கு துரோகம் இழைத்த மோடி அரசும் தமிழர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்றார்.

மேலும், இக்கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் சி.வி.எம்..பி எழிலரசன், டாக்டர் ஆர்.டி.அரசு, புகழேந்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் கே..செங்குட்டுவன், அவைத்தலைவர் சந்துரு, துணைத்தலைவர்கள் கருணாநிதி, ஜெகநாதன், பொருளாளர் வெங்கடேசன் மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள் பி.எம்.குமார், சிறுவேடல் செல்வம்,

குமணன், சாலவாக்கம் குமார், உத்திரமேரூர் ஞானசேகரன், வாலாஜாபாத் பி.சேகர், பாண்டியன், வேளியூர் வேதாசலம், வேளியூர் எம்.சங்கர், சிங்காடிவாக்கம் பூபாலன் , .வி.சுரேஷ்குமார், விடுதலை சிறுத்தைகள் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பாசறை செல்வராஜ்,  திருமாதாசன், டேவிட்,காங்கிரஸ் நகர பெறுப்பாளர்கள் சேரன், ஆர்.குரு, இராம.நீராளன், நாதன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.