Home தமிழகம் தளவராம்பூண்டி கிராமத்தில் வனப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

தளவராம்பூண்டி கிராமத்தில் வனப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

19
0
SHARE

காஞ்சிபுரம், செப். 14&

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா தளவராம்பூண்டி கிராமத்தில் உள்ள அரசினர் தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் நேற்று காடுகளின் தூய்மை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடந்தது.

வனச்சரக அலுவலர் சிவபெருமான் தலைமை தாங்கினார். வனவர் முத்துக்குமரன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கன்னியம்மாள்முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை வித்யா வரவேற்றார். காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலர் போஸ்லே சச்சின் துக்காராம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். , தளவராம்பூண்டி கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியினை மாவட்ட வன அலுவலர் போஸ்லே சச்சின் துக்காராம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணியானது தளவராம்பூண்டி கிராமத்தில் உள்ள வீதிகளின் வழியே ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பெருங்கோழி காப்புக்காடு வனப்பகுதியில் பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் வனக் காப்பாளர்கள் ராமதாஸ், பெருமாள், வனக்காவலர் விஜயகுமாரி, வெங்கடேசன், பள்ளி மாணவமாணவியர்கள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வனக்காப்பாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.