Home தமிழகம் பொதட்டூர்பேட்டையில் கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா கோலாகலம்

பொதட்டூர்பேட்டையில் கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா கோலாகலம்

9
0
SHARE

பொதட்டூர்பேட்டை, செப். 14&

பொதட்டூர்பேட்டையில் கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பெண்கள் அம்மனுக்கு படையலிட்டு மாவிளக்கு தீபம் ஏற்றிவைத்து வழிபட்டனர்.  திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டையில் ஜாத்திரை திருவிழா  துவங்கி  நடைபெற்று வருகின்றது. நேற்று காலை கங்கையம்மன் திருவீதி உலா நடைபெற்றது.  நகரின் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் வீதி உலா நடைபெற்றது. அப்போது  கரகாட்டம், ஒயிலாட்டம் கலைஞர்கள் நாடங்களுடன்  மங்கள வாத்தியங்கள் முழங்க அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள்  அம்மனுக்கு படையல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும் தேங்காய் உடைத்து வழிபட்டனர். அம்மனை நடுவீதியில் அமரவைத்து பெண்கள்  கும்பம் கொட்டி வழிபட்டனர். விழாவில்  பள்ளிப்பட்டு முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் இ.எஸ்.எஸ்.இராமன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். திரளாக கூடியிருந்த பக்தர்கள் மத்தியில் அம்மன்  ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீரிக் கரைக்கப்பட்டது. ஜாத்திரை திருவிழா ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here