Home இந்தியா வங்கி கடனை பெரிய மனிதர்களிடம் வசூலிப்பது சவாலாக உள்ளது மத்திய மந்திரி அருண்ஜெட்லி பேச்சு

வங்கி கடனை பெரிய மனிதர்களிடம் வசூலிப்பது சவாலாக உள்ளது மத்திய மந்திரி அருண்ஜெட்லி பேச்சு

22
0
SHARE

புனே, செப். 13&

புனேயில் கூட்டுறவு வங்கியின் நூற்றாண்டு  விழாவில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி பங்கேற்றார்.

விழாவில் அவர் பேசியதாவது;&

விவசாயம், சிறு தொழில்களுக்காக சிறிய அளவில் கடன் பெறுபவர்கள் அதனை திருப்பி செலுத்தா விட்டால் வங்கிகளில் வாராக்கடன் அளவு குறைவாகத்தான் இருக்கும்.ஆனால் சமுதாயத்தில் பெரிய மனிதர்கள் என்று கூறப்படும் தொழில் அதிபர்கள் பலர் கடனை முறையாக திருப்பி செலுத்தாததே வங்கிகளின் வாரக்கடன் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.அவர்களுக்கு கொடுத்த கடனை திரும்ப பெறுவது வங்கிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.

விவசாயிகள், தொழில் அதிபர்கள் மாணவர்கள் என பல்வேறு தரப்புக்கு கடன் கொடுப்பதன் மூலம் வங்கிகள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன.ஆனால் கடனை வாங்குபவர்கள் அதனை முறையாக திருப்பி செலுத்த தவறினால் வங்கிகளின் கடன் கொடுக்கும் திறன்  பாதிக்கப்படுகிறது. இது நாட்டின் வளர்ச்சியில் எதிர்மறையான வளைவுகளை ஏற்படுத்தும்.

வங்கிகளிடம் இருந்து பெருமளவில் கடனை பெற்றுக் கொண்டு திரும்ப செலுத்தாமல் இருக்கும் பெரும் தொழில் அதிபர்களிடமிருந்து முதன் முறையாக பணத்தை வசூலிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்படும் பணம் கிராமப்புற மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்.