Home இந்தியா மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 1% உயர்வுஅமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 1% உயர்வுஅமைச்சரவை ஒப்புதல்

26
0
SHARE

புதுடெல்லி, செப். 13&

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 1 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதே போன்று அகவிலை நிவாரணம் 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 1 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று அகவிலை நிவாரணமும் 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலை உயர்வு மூலம் 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55.51 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள். ஜூலை, 1&ம் தேதி முதல் முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வருகிறது.

தனியார் நிறுவன ஊழியர்களின் பணிக்கொடை திருத்த மசோதாவிற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.