Home தமிழகம் மேட்டூர் அணை நீர்மட்டம் 76 அடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்மட்டம் 76 அடியாக உயர்வு

11
0
SHARE

மேட்டூர், செப். 13&

கர்நாடக மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அங்குள்ள  கபினி, கிருஷ்ணராஜ சாகர் அகிய அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் அந்த அணைகளில் இருந்து நீர் அவ்வபோது குறைந்தும், அதிகரித்தும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.  இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் மேட்டூர் அணையை வந்து அடைகிறது.

   நேற்று காலை வினாடிக்கு 20,170 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு  வந்தது. இன்று நீர் வரத்து 3,729 கனஅடி குறைந்து விநாடிக்கு 16,441 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

நீர் வரத்து  அதிகமாக இருப்பதால் மேட்டூர்  அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று முன் தினம் காலை 75.26 அடியாக இருந்த  நீர் மட்டம் நேற்று காலை 76.69 அடியை எட்டியது. ஒரே நாளில் 1.43 அடிவரை நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

இது பற்றி விவசாயிகள் கூறியதாவது;&    மேட்டூர் அணையிலிருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12ம்& ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28&ந் தேதி வரை குறுவை, சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிக்காக தண்ணீர் திறந்து விடப்படும் இதன் மூலம் காவிரி டெல்டா  மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் ஆனால் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படியும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படியும் கர்நடகம் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்க மறுப்பதால் காவிரி டெல்டா விவசாயம் பாதிக்கப்படுகிறது.

நடப்பாண்டிலும்  அணியின் நீர் மட்டம் திருப்திகரமாக இல்லாத்தால் குறிப்பிட்ட நாளன ஜூன் 12&ந் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை .

எனவே, தற்போது கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து ,மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 76 அடி எட்டி இருப்பதால் அணையில்  இருந்து  சம்ப சாகுபடிக்காக இந்த மாத இறுதிக்குள் தண்ணீர்திறக்க வாய்ப்பு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here