Home தமிழகம் சாரண, சாரணியர்இயக்கத்தை காவி மயமாக்க துணை போவதா? அரசுக்கு முத்தரசன் கேள்வி

சாரண, சாரணியர்இயக்கத்தை காவி மயமாக்க துணை போவதா? அரசுக்கு முத்தரசன் கேள்வி

14
0
SHARE

சென்னை, செப். 13&

சாரண, சாரணியர் இயக்கத்தை காவி மயமாக்க அரசு துணை போவது கண்டனத்திற்குரியது முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன்

வெளியிட்டுள்ள அறிக்கையில், சாரண, சாரணியர் இயக்கத்தில் இந்நாள் வரை அரசியல் தலையீடு இருந்தது இல்லை. தற்போது காவி அரசியலை நுழைத்திட பா... மேற்கொண்டுள்ள முயற்சிக்கு தமிழ்நாடு அரசு அடிபணிந்தது அவலத்தின் உச்சமாகும்.

சத்தமில்லாமல் உடற்பயிற்சி போர்வையில் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் மதவெறி அமைப்பு ஒளிந்து, மறைந்து செய்து வந்தது. தற்போது தமிழ்நாட்டில் மிக, மிக பலவீனமான ஆட்சி நடந்து கொண்டிருப்பதை பயன்படுத்தி தங்களின் நோக்கத்தை சட்டப்பூர்வமாக நிறைவேற்றிக் கொள்ள சாரண, சாரணிய இயக்கத்தை பா... பயன்படுத்திட முனைந்துள்ளது. .ர்.எஸ்.எஸ். அபாயம் குறித்து கவலைப்படாமல், கண்டு கொள்ளாமல் தங்களின் பதவி சுகம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ள எடப்பாடி கே.பழனிச்சாமி அரசு துணையாய் இருப்பது

கடும் கண்டனத்திற்குரியது.

அப்பட்டமான இந்துத்துவா வெறியரான எச்.ராஜா வை தலைவராக்கும் முயற்சிகளை யார் மேற்கொண்டாலும் கொடிய குற்றத்திற்கு துணை போனவர்களாக கருதப்படுவர். வாக்களிக்கும் தகுதி படைத்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்டக்கல்வி அதிகாரிகள், மற்றும் ஆசிரியர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்; என்பதனை சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றலல்.

பலவீனமானமாநிலஆட்சியைபயன்படுத்திதங்களைபலப்படுத்திக்கொள்ளும்வகுப்புவாதசக்திகளுக்குதமிழகமக்கள்ஒருபோதும்துணைபோனதும்இல்லை. போகவும் மாட்டார்கள் என்பது உறுதிசெய்யப்படும் என்று நம்புகிறோம்.

பலிபீடத்தில் சாய்ந்து விட்ட அ.தி.மு.. அரசுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here