Home சினிமா எனது பெயரில் போலி முக நூல் கணக்குநடிகர் எஸ்.வி. சேகர் புகார்

எனது பெயரில் போலி முக நூல் கணக்குநடிகர் எஸ்.வி. சேகர் புகார்

11
0
SHARE

சென்னை, செப். 13&

தன் பெயரில் போலி முக நூல் கணக்கு தொடங்கியுள்ளதாக, நடிகர் எஸ்.வி. சேகர் , போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே விஸ்வநாதனிடம் நடிகர் எஸ்.வி. சேகர், நேற்று புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

எனது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி, அதில் பல பதிவுகள், தவறான உள்நோக்கத்துடன் போடப்பட்டுள்ளன. இது என்னுடைய பொது வாழ்விற்கும், என் அரசியல் சார்பு நிலைக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.

ஆகவே அவற்றை நீக்கி, அதை பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்துவிசாரணைநடத்தகாவல்கமிஷனர்உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here