Home மற்றவை டி.டி.வி. தினகரன் போல் ஓராயிரம் தினகரன் வந்தாலும் ஆட்சியை அசைக்க முடியாது முதல்வர்...

டி.டி.வி. தினகரன் போல் ஓராயிரம் தினகரன் வந்தாலும் ஆட்சியை அசைக்க முடியாது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

10
0
SHARE

சென்னை, செப். 13&

டி.டி.வி. தினகரன் போல, ஓராயிரம் தினகரன் வந்தாலும், இந்த ஆட்சியையோ, கட்சியையோ அசைக்க முடியாது என்று முதல்வர் ஆவேசத்துடன் பேசினார்.

வானகரத்தில் நடைபெற்ற அ.தி.மு.. பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா செய்த சாதனைகளை பட்டியலிட்டுக் கூறலாம். அவ்வளவு சாதனைகளை தமிழ்நாட்டு மக்களுக்கு அள்ளி, அள்ளி தந்திருக்கின்றார். இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் இவ்வளவு திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. அவ்வளவு திட்டங்களையும் ஏழை மக்களுக்காக கொண்டு சேர்த்த பெருமை அவர்களை சாரும். இன்றைக்கு நினைக்கின்றார், யார் என்று உங்களுக்கு தெரியும், டி.டி.வி.தினகரன், யார் இவர்? 10 ஆண்டு காலம் எங்கே போனார்? வனவாசம் போயிருந்தார். மறைந்த முதல்வரால் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கி வைக்கப்பட்டவர் இந்த டி.டி.வி.தினகரன். இன்றைக்கு நம்மைப் பார்த்து கேட்கின்றார்.

மேடையிலே இருக்கின்றவர்கள் உங்களையும், என்னையும் துரோகி என்று பட்டம் சூட்டுவதற்கு என்ன தகுதி இருக்கின்றது? என்று இந்த நேரத்திலே கேட்க விரும்புகின்றேன். இங்கே வந்திருகின்றவர்களும், மேடையிலே அமர்ந்திருக்கின்றவர்களும் இரவு, பகல் பாராமல் ரத்தத்தை மண்ணிலே சிந்தி, உழைத்ததின் காரணமாக,  மறைந்த முதல்வரின் செல்வாக்கின் காரணமாக இந்த கட்சியும், ஆட்சியும் உயர்ந்து நிற்கின்றது.

இவர்களைப்போல துரோகிகள் யாரும் இல்லை. எவ்வளவோ சிரமத்தை கொடுத்தார்கள். மறைந்த முதல்வர் அதையெல்லாம் தாங்கிக்கொண்டு இந்த கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி சென்றார். மறைந்த முதல்வரின் விசுவாசி என்று சொல்கின்றார்களே, ஏன் 10 ஆண்டுகாலம் நீக்கி வைத்தார்கள் இவர்களை, எண்ணிப் பாருங்கள். மறைந்த முதல்வரால், இந்தக் கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கக்கூடாது என்று நீக்கி வைக்கப்பட்டவர்கள் இவர்கள். இவர்கள் கட்சிக்கும், ஆட்சிக்கும் உரிமை கொண்டாடுகின்றார்கள்.  எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

சிந்தியுங்கள். இங்கு வருகை புரிந்திருக்கின்ற , பொதுக்குழு உறுப்பினர்கள் இரவு, பகல் பாராமல் உழைக்கின்றார்கள்.

மறைந்த முதல்வர் எந்தத் தேர்தலை வந்தாலும், அது கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆனாலும் சரி, உள்ளாட்சித் தேர்லானாலும் சரி, நாடாளுமன்ற தேர்தலானாலும் சரி, அவர் நிறுத்துகிற வேட்பாளரை வெற்றிபெறச் செய்வது தான் இலட்சியம் என்ற குறிக்கோளோடு இயங்கிக் கொண்டிருக்கின்ற பொதுக்குழு உறுப்பினர்கள் நீங்கள். ஒன்றரை கோடி அ.தி.மு.. தொண்டர்களின் உழைப்பு, அவருக்கு பெரும்செல்வாக்கை உருவாக்கியிருக்கின்றது. அவர் செய்த சாதனைக்கு இன்றைக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது. இவர்கள், இன்றைக்கு ஆட்சியை கவிழ்ப்போம் என்று சொல்கின்றார்கள். என்ன தகுதி இருக்கின்றது எண்ணிப் பாருங்கள். ஏற்கனவே திட்டமிட்டு இந்த கட்சியை உடைக்க வேண்டுமென்று முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். நாள்தோறும் நீக்கல் பட்டியல். இவரே உறுப்பினரில்லை, இவர் எப்படி மற்றவர்களை நீக்கமுடியும். சொல்லுங்கள் பார்க்கலாம். நீங்களே உறுப்பினராக இல்லாதபோது எப்படி நீங்கள் நீக்க முடியும்.

இவர் வேண்டுமென்றே திட்டமிட்டு இன்றைக்கு உண்மையாக இருக்கின்ற அ.தி.மு.. பொதுக்குழு உறுப்பினர்கள் இதைக் கூட்டி தங்களுக்கு எதி ராக நடவடிக்கை எடுப்பார்கள் என்று எண்ணி, நீதிமன்றம் சென்றார்.

நீதிமன்றத்தில் என்ன கிடைத்தது? நீதிதான் வென்றது, என்றைக்கும் நீதி தான் வெல்லும். ஆகவே, இன்றைக்கு நீதி வென்றிருக்கிறது. முதல் கட்டத்திலேயே நமக்கு சாதகமாக இருக்கின்றது , டி.டி.வி.தினகரன் போல, ஓராயிரம் தினகரன் வந்தாலும், இந்த ஆட்சியையோ, கட்சியையோ அசைக்கவோ, ஆட்டவோ முடியாது.

ஒருதொண்டன்மீதுகூடஇவர்கள்கைவைக்கமுடியாது, பிரிந்து செல்லமாட்டார்கள். இவ்வாறு பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here