Home தமிழகம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளை காப்பாற்ற வேண்டும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேச்சு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளை காப்பாற்ற வேண்டும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேச்சு

8
0
SHARE

சென்னை, செப். 13&

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளை காப்பாற்ற வேண்டும் என்று

.பி.எஸ். கூறினார்.

வானகரத்தில் நடைபெற்ற அ.தி.மு.. பொதுக்குழு கூட்டத்தில் துணை முதல்வர்

.பன்னீர்செல்வம் பேசியதாவது:

நம்மை யாரும் பிரித்தாள முடியாது என்பது, உங்கள் ஒற்றுமையில் தெரிகிறது. நம்மை யாரும் வெல்ல முடியாது என்பது, உங்கள் எழுச்சியில் தெரிகிறது. எம்.ஜி.ஆர். தீயசக்திகளை அழிப்பதற்காகவே, .தி.மு.. என்ற இயக்கத்தை தொடங்கினார். தமிழ் நாட்டையும், தமிழக மக்களையும், அந்த தீயசக்திகள் தீண்டி விடாமல், தெய்வ சக்தியாக இருந்து பாதுகாத்தவர் மறைந்த முதல்வர்.

அவரின் மறைவிற்குப் பிறகு, தமிழ் நாட்டையும், தமிழக மக்களையும் காப்பாற்றுகின்ற பெரும் பொறுப்பையும், காப்பாற்றுகின்ற கடமையையும், விசுவாசத் தொண்டர்களாகிய நம்மிடம் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். எனக்குப் பின்னாலும், .தி.மு.., 100 ஆண்டுகளுக்கு மேலும் இருக்கும் என்று  சொன்னார். நம்மீது உள்ள நம்பிக்கையில்தான் சொன்னார். நமது ஒற்றுமையின் மீதுள்ள நம்பிக்கையில்தான் சொன்னார். மறைந்த முதல்வர், அன்று சட்டமன்றத்திலே ஒரு பெண் சிங்கம் போல கர்ஜித்தது, வெறும் முழக்கமல்லதமிழ் நாட்டு மக்களுக்கு அவர் கொடுத்த வாக்குறுதி

அவர் கொடுத்த அந்த வாக்குறுதியை, அவரின் பிள்ளைகளான நாம் காப்பாற்ற வேண்டும். அவரின் கொள்கைகளைக் காப்பாற்ற வேண்டும். அவரின் லட்சியங்களைக் காப்பாற்ற வேண்டும். அவர் கட்டிக்காத்த கட்சியை காப்பாற்ற வேண்டும். நாம் எடுத்து வைக்கின்ற…. ஒவ்வொரு அடியும்ஒவ்வொரு செயலும்அவருக்கு புகழ் சேர்க்க வேண்டும். நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சிக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

அதற்காக விசுவாசத் தொண் டர்களாகிய நாம் அனைவரும், நம்மை அர்ப்பணித்து செயல்பட வேண்டும்.சாதாரண அடிமட்டத் தொண்டர்களுக்கும், கட்சியிலும், ஆட்சியிலும், மக்கள் பணியாற்றுகின்ற மாபெரும் பொறுப்புகள் வழங்கி, மகிழ்ந்தவர் மறைந்த முதல்வர். இவ்வாறு பேசினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளை காப்பாற்ற வேண்டும்

துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேச்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here