Home சுடச்சுட அத்வானி, அமித்ஷா 27&ந் தேதி சென்னை வருகை

அத்வானி, அமித்ஷா 27&ந் தேதி சென்னை வருகை

11
0
SHARE

சென்னை, செப். 13&

பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா&லலிதா தம்பதியரின் மணி விழா வருகிற 27&ந் தேதி கொண்டாடப்படுகிறது.  நிகழ்ச்சிகள் கோவிலம்பாக்கம் 200 அடி ரோட்டில் உள்ள ஜே.டி. மகாலில் நடைபெறுகிறது.

இதில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா , பா..க முத்த தலைவர்அத்வானி, மத்திய அமைச்சர்கள்  நிர்மலா சீதாராமன், பொன்ராதாகிருஷ்ணன், ஆனந்த குமார், ஹர்சவர்தன் தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவ் கேரள கவர்னர் சதா சிவம், புதுவை கவர்னர் கிரண்பேடி, குஜராத் கவர்னர் ஓம்பிரகாஷ் கோஹ்லி மற்றும் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை, இல. கணேசன் எம்.பி. உள்பட கட்சி நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

எச்.ராஜா 10 வயதில்  ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்தார். கல்லூரி படிப்பு முடிந்ததும் சிஏ., பி.எல். பட்டங்களைப் பெற்றார்.

இந்து முன்னணி அமைப்பில் செயல்பட்டு பின்னர் பா.ஜனதா தொடங்கப்பட்டதும் கட்சிப் பணிக்கு திரும்பினார்.தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், ஆகிய மொழிகளை சரளமாக பேசுவார்.

மணி விழாவில் காலையில் ஹோமம், 8 முதல் 8.45  மணிவரை  அபிஷேகம், 9 மணி முதல் 9&30 வரை மாங்கல்யதாரணம் நடை பெறுகிறது. அதன்  பிறகு ஆசி பெறுதல், தலைவர்கள் வாழ்த்துரை இடம் பெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here