Home அரசியல் ‘முதலில் தலைவராகுங்கள் பின்னர் முதல்வராகலாம்’ ஸ்டாலின் மீது முதல்வர் பாய்ச்சல்

‘முதலில் தலைவராகுங்கள் பின்னர் முதல்வராகலாம்’ ஸ்டாலின் மீது முதல்வர் பாய்ச்சல்

30
0
SHARE

சென்னை, செப். 13&

உங்கள் கட்சிக்கு முதலில் தலைவராகுங்கள், பின்னர் தமிழகத்திற்கு முதல்வராகலாம் என்று ஸ்டாலின் குறித்து முதல்வர் பேசினார்.

வானகரத்தில் நடைபெற்ற அ.தி.மு.. பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

.தி.மு.. எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம்,  மறைந்த முதல்வர் ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம். இருபெரும் தலைவர்களும் உருவாக்கிய இந்த இயக்கத்தை எவராலும் வெல்லவும் முடியாது. அழிக்கவும் முடியாது. ஆகவே, சிலர் கைக்கூலியாக மாறிவிட்டார்கள்.

தி.மு..வின் செயல்தலைவர் ஸ்டாலின், அவர் எப்பொழுது பார்த்தாலும், மைக் கிடைத்துவிட்டால் போதும், இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும், என்னய்யா உனக்கு துரோகம் செய்தது இந்த ஆட்சி? சொல்வார்களா? ஆகவே, இந்த ஆட்சி, முறைப்படி தேர்தலில் வென்ற ஆட்சி, சட்டமன்றத்திலே நிரூபிக்கப்பட்ட ஆட்சி, ஒன்றும் செய்யமுடியாது. ஆகவே, இன்றைக்கு ஆட்சி, அதிகாரம் இரண்டும் அ.தி.மு..வில் இருக்கிறது.

அதேபோல, வலிமையான ஆட்சியாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியோடு இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  எப்பொழுது பார்த்தாலும், எந்தக் கூட்டம் பார்த்தாலும், இதுதான் பேசுவது, அவருக்கு பித்துப் பிடித்துப்போய்விட்டது, பிரமையாகிவிட்டார். விரக்தியின் விளிம்பிற்கே போய்விட்டார்.

ஆக, இப்பொழுதாவது புரிந்திருக்கிறதே, நாம் முதலமைச்சராகிவிடலாமே. நீ கட்சிக்கே தலைவராக முடியவில்லை, செயல்தலைவர்தான் ஆகியிருக்கிறாய். எங்கே நீ முதலமைச்சராக முடியும், உன் கட்சிக்கு முதலில் தலைவராகு, அப்புறம் நினைத்துப் பார்க்கலாம்.

ஆகவே, உங்களுடைய அப்பாவே இந்தக் கட்சியை வெல்ல முடியவில்லை, நீங்கள் எங்கேபோய் இந்தக் கட்சியை வெல்லமுடியும்? எம்.ஜி.ஆர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளியிலே படித்த மாணவர்கள் நாம். அவர்கள் கற்றுக்கொடுத்த பாடத்தை அடித்தளமாக வைத்துக் கொண்டு, கட்சியும், ஆட்சியும் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆகவே, எவராலும் இந்த ஆட்சியை அசைக்கவும் முடியாது, கட்சியை உடைக்கவும் முடியாது, அவர்கள் கண்ட கனவெல்லாம் பகல் கனவாகத்தான் இருக்கும். இவ்வாறு பேசினார்.