Home சுடச்சுட அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் சசிகலா நியமனம் ரத்து ஓ.பி.எஸ். & இ.பி.எஸ்.க்கு முழு...

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் சசிகலா நியமனம் ரத்து ஓ.பி.எஸ். & இ.பி.எஸ்.க்கு முழு அதிகாரம்

23
0
SHARE

.தி.மு..வின் தற்காலிக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்தும், எடப்பாடி பழனிசாமி, .பன்னீர்செல்வத்துக்கு முழு அதிகாரம் வழங்கியும் அ.தி.மு.. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை, செப்.13&

அதிமுக (அம்மா), அதிமுக புரட்சித் தலைவி அம்மா ஆகிய அணிகளின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னை ஸ்ரீவாரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். பொதுக்குழுவில் 2130 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு, பொதுக்குழு உறுப்பினர்கள் சொகுசு பஸ்களில் அழைத்து வரப்பட்டனர். அழைப்பு கடிதம் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 9 மணி அளவில் அ.தி.மு.. மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் வர ஆரம்பித்தனர். அதனைத் தொடர்ந்து  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வந்தார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அவருக்கு அ.தி.மு.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

காலை 10.30 மணியளவில்  தொடங்கியது செயற்குழு கூட்டம். முதலில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டம் துவங்குவதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதல் தீர்மானத்தை அ.தி.மு.. தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வாசித்தார். அதில் அ.தி.மு.. யாராலும் அசைக்க முடியாத எக்கு கோட்டை ஆகும். தமிழ் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம். எனவே எப்பொழுதும்   ஒன்றுபபட்டு, ஓரணியாய் திரண்டமைக்கு அங்கீகாரமும், பாராட்டும் தெரிவிக்கிறோம். இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுத்து எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும்   வெற்றி காண உழைக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர். தந்த சின்னமாம் இரட்டை இலை சின்னத்தையும், .தி.மு.. என்ற பெயரையும் மீட்டெடுத்து, கட்சியை வெற்றிப்பாதையில் நடத்திட வேண்டும். எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து வரவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும் அ.தி.மு..  வெற்றி பெற்றிட அ.தி.மு.. தொண்டர்கள் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

சசிகலா நியமனம் ரத்து

.தி.மு.. அமைப்பு செயலாளரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாருமான வைத்திலிங்கம் எம்.பி. முன்மொழிந்த தீர்மானத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தந்த அதிர்ச்சியும், கவலையும் நிறைந்த சூழ்நிலையில் 29.12.2016 அன்று கூட்டப்பட்ட அ.தி.மு.. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அன்றாடப்பணிகளை மேற்கொள்ள வி.கே. சசிகலா கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

29.12.2016 அன்று  வி.கே. சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்வதோடு, வி.கே. சசிகலா 30.12.2016 முதல் 15.2.2017 வரை மேற்கொண்ட நியமனங்கள், நீக்கங்கள், சேர்த்தல்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது .

.தி.மு.. சட்டதிட்ட விதிகளின்படி நியமனம் செய்யப்படாதவரும், கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாதவருமான டி.டி.வி. தினகரன் கட்சியின் நிர்வாகிகளை நீக்குவது மற்றும் புதிதாக நியமிப்பது குறித்து வெளியிடும் எந்த ஓர் அறிவிப்பும் செல்லத்தக்கதல்ல. அவை கட்சியின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டது இல்லை என்று தெரிவித்தார்.

.தி.மு..வின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர், .தி.மு..வின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்த இருபெரும் தலைவர்கள் விட்டுச் சென்ற இடத்தை இனி யாராலும் ஒருபோதும் நிரப்ப முடியாது என்ற காரணத்தால், இனி அ.தி.மு..வில் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு இல்லை என்று முடிவெடுத்து அந்தப் பதவியை ரத்து செய்கிறோம். அதற்கு ஏற்ப, .தி.மு..வின் சட்டதிட்ட விதி எண்.43 திருத்தம் செய்யப்படுகிறது. இந்தத் திருத்தங்களை பொதுக்குழு ஏகமனதாக ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது.

முழு அதிகாரம்

கட்சியின் அமைப்புத் தேர்தல் நடைபெறும் வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கையினை பெற்று பல ஆண்டுகள் கட்சிப் பணியாற்றி வந்திருக்கும் கட்சியின் முன்னோடிகளான   பொருளாளரும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்   ஒருங்கிணைப்பாளராகவும், கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும், சேலம் புறநகர் மாவட்ட செயலாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

கட்சியின் பொதுச் செயலாளருக்கு கட்சியின் சட்ட திட்ட விதிகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் முழுமையாகப் பெற்று கட்சியை வழிநடத்துவர். இரண்டு கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்படவும், அவற்றில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்புச் செயலாளரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் நியமிக்கப்படுகின்றனர். மேலும், கட்சியின் வழிகாட்டுக்குழு ஒன்று அமைக்கப்படுகிறது. .தி.மு.. சட்டதிட்ட விதிகளின்படி, கட்சியின் பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்து பொறுப்புகளும் அதிகாரங்களும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் முழுமையாக வழங்கப்படுகிறது.   

தேர்தல் ஆணையத்திற்கும், அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும், வங்கி கணக்குகள் உள்ளிட்ட அனைத்து வரவு செலவுகளுக்கும், .தி.மு.. சார்பில் வழங்கப்பட வேண்டிய படிவம் ஏ, படிவம் பி  உள்ளிட்ட அனைத்து வகை ஆவணங்களிலும் மற்றும் கட்சி தொடர்புடைய அனைத்து அறிவிப்புகளிலும், நியமனங்களிலும் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளிலும், ஒருங்கிணைப்பாளரும்  இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து, இருவரும் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும்.

அடுத்த தீர்மானத்தில், ஜெயலலிதாவால் கட்சியின் பல்வேறு பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டவர்களும், கட்சியின் அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் அவரவர் பொறுப்புகளில் தொடர்ந்து செயல்பட ஒப்புதல் அளிக்கப்படுகிறது.      தமிழ் மக்களுக்கு மகத்தான தொண்டாற்றிய மாபெரும் தலைவர்களுள் ஒருவரான அ.தி.மு.. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றும், அந்த விழா ஆண்டு முழுவதும் நடைபெற வேண்டும் என்று ஜெயலலிதா விரும்பியவாறு மாவட்டந்தோறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடி வரும் தமிழக அரசுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறது.     மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில்  அவரின்  நினைவிடத்தில் மணிமண்டபம் அமைத்திட உடனடியாக நடவடிக்கை எடுத்து, அதற்கென ரூ. 15 கோடியை ஒதுக்கீடு செய்து, பணிகள் தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புற செய்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக அரசுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் பாராட்டுதல்  தெரிவிக்கப்பட்டது.   

புயல், வெள்ள பாதிப்புகளில் இருந்தும், வரலாறு கண்டிராத வறட்சியில் இருந்தும் தமிழகத்தை காப்பாற்றி அனைத்து வகையான நிவாரணப் பணிகளையும் சிறப்புற மேற்கொண்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ச்சிப் பாதையில்   நடைபோட்டு வரும்  தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரும்,  யாருக்கும் இடம் தராமல் கட்சியையும், .தி.மு.. அரசையும்  நடத்திச் செல்லும் நிர்வாகிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கிறது. மேற்கண்டவை உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.