Home சுடச்சுட சட்டமன்றத்தை கூட்டினால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் மு.க.ஸ்டாலின் பேட்டி

சட்டமன்றத்தை கூட்டினால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் மு.க.ஸ்டாலின் பேட்டி

7
0
SHARE

சென்னை, செப். 13& சட்டமன்றத்தை கூட்டினால் தி.மு.க சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என மு..ஸ்டாலின் தெரிவித்தார்.

தி.மு.. செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு..ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தி.மு..சார்பில் கவர்னரிடம் சென்று தெளிவாக கூறிவிட்டு வந்திருக்கிறோம். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னருக்கு இருக்கக்கூடிய பொறுப்பு, கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். அப்படியில்லையென்றால், விரைவில் நீதிமன்றத்தை நாடுவோம்., மக்கள் மன்றத்தை சந்திப்போம் என்று தெளிவாக சொல்லியிருந்தோம்.

அந்த அடிப்படையில் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு போட்டுள்ளோம்.  அந்த வழக்கின் அடிப்படையில், ஜனநாயக அடிப்படையில் கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறோம்.

.தி.மு.. அரசுக்கு  பெரும்பான்மை இருக்கிறது என்று அவர்கள் சொல்கின்றனர். அப்படி பெரும்பான்மை இருக்கிறது என்றால், சட்டமன்றத்தை கூட்டக்கூடிய அதிகாரம் கூட்டத்தொடரை ஏற்கனவே முடித்த பிறகு மீண்டும் கூட்டக்கூடிய அதிகாரம் கவர்னருக்குதான் இருக்கிறது. ஒரு வேளை முதலமைச்சருக்கு தன் மீதான் நம்பிக்கையை நிரூபிக்கக்கூடிய தைரியம் இருந்தால், அவரே கவர்னரிடம் பரிந்துரை செய்தால் சட்டமன்றத்தை கூட்டுவார். அப்படி கூட்டினால் நிச்சயமாக தி.மு.. சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம்.

தி.மு..வின் கொள்கை மற்றும் கருணாநிதியின் உணர்வு எல்லாமே கொல்லைப்புறமாக என்றைக்கும் திமுக ஆட்சிக்கு வர விரும்பியது இல்லை, வரவும் வராது என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here