Home அரசியல் மக்கள் அவரை விரும்பினால் டி.டி.வி.தினகரன் புது கட்சி ஆரம்பிக்கட்டும் மதுசூதனன் யோசனை

மக்கள் அவரை விரும்பினால் டி.டி.வி.தினகரன் புது கட்சி ஆரம்பிக்கட்டும் மதுசூதனன் யோசனை

31
0
SHARE

சென்னை, ஆக. 14 & மக்கள் அவரை விரும்பினால், டி.டி.வி. தினகரன் வேண்டுமென்றால், புது கட்சி ஆரம்பித்துக்கொள்ளட்டும் என மது சூதனன் தெரிவித்தார்.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, அருணாச்சலீஸ்வர் கோவில் தெரு உள்ளிட்ட 13 இடங்களில், 8 வது கட்டமாக, அதிமுக புரட்சி தலைவி அம்மா மன்றம் திறந்து வைக்கப்பட்டது. மன்றங்களை திறந்து வைத்து, அவை தலைவர் மதுசூதனன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், பேரவை தலைவர் ஆர்.எஸ். ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், சசிகலா செயலற்று போய் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், இரு அணிகள் இணைய வேண்டு மென்றால், சசிகலாவை நிரந்தரமாக ஓரங்கட்ட வேண்டும். அவர்களின் குடும்பத்தை அறவே ஒழிக்க வேண்டும். கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து தான், எம்ஜிஆர் அ.தி.மு..வை தொடங்கினார். அவரின் நோக்கம், அதிமுக மக்கள் கூட்டணி, கொடி கட்டும் தொண்டன் தான், .தி.மு..வின் நாடி நரம்பு என்றார். சசிகலா குடும்பம் என்ன, .தி.மு..விற்காக உழைத்தனரா? .தி.மு..வில், சசிகலா குடும்பத்தை சேர்ந்த அந்த 16 பேருக்கு என்ன வேலை? மறைந்த முதல்வர் ஜெயலலலிதா சாவில் உள்ள மர்மத்தை சி.பி.. விசாரிக்க வேண்டும்.

யார் கொலைகாரி, யார் கொலைக்காரர்கள் என்று தெரிய வேண்டும். ஜெயலலிதாவால், மதிக்கப்பட்ட வர் ஓ. பன்னீர்செல்வம், அவரால், இரண்டுமுறை முதல்வரானார். எம்.ஜி.ஆர் , கட்சியில் கொண்டு வந்த பைலாவில், தொண்டர்கள் தான் அ.தி.மு.. என்றுள்ளார். வெற்றிவேலுவுக்கு, .தி.மு.. வரலாறு தெரியாது. அவர், அதிமுகவே கிடையாது, அவர் , ஒரு கட்டபஞ்சாயத்து தலைவர். டி.டி.வி. தினகரனால், கட்சியில் இருந்து ஒரு குண்டு ஊசியை கூட எடுக்க முடியாது. அவரை, மக்கள் விரும்பினால், புது கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும். .பன்னீர்செல்வம், முதல்வராக இருந்தபோது, ஜல்லிகட்டு, குடிநீர், வர்தா புயல் பிரச்சினைகளை தீர்த்து வைத்தார்ஆகவே, .பன்னீர்செல்வத்திற்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்றார்.