Home தமிழகம் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடராஜனை பார்க்க சசிகலா பரோலில் வருவாரா?

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடராஜனை பார்க்க சசிகலா பரோலில் வருவாரா?

11
0
SHARE

சென்னை, செப். 12& மருத்துவனையில் சிகிச்சை பெறும் நடராஜனை பார்க்க சசிகலா பரோலில் வருவார் என தெரிகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன், ஆகியோர் பெங்ளூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.  சசிகலாவை 15 நாட்களுக்கு ஒரு முறை தினகரன் சந்தித்து பேசி வருகிறார்.

இன்றுதினகரன்ஆதரவுஎம்.எல்..க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வென், கதிர்காமு, மாரியப்பன் கென்னடி ஆகியோர் சசிகலாவை சந்திப்பதாக இருந்தது. ஆனால் இந்த சந்திப்பு திடீரென்று ரத்து செய்யப்பட்டது. சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜன், மனைவி சசிகலாவை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். இதனால் சசிகலா பரோலில் வர வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது. கர்நாடக சிறைவிதிகளின்படி ஒரு கைதி 6 மாதம் சிறையில் இருந்தால் அதற்கு பிறகு பரோலில் செல்ல அனுமதி உண்டு.

இதனால் உடல்நிலை சரியில்லாமல் உள்ள கணவரைப் பார்க்க சசிகலா பரோல் கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சசிகலா பரோல் கேட்கவில்லை.  இதுகுறித்து கர்நாடக மாநில அ.தி.மு.. அணி செயலாளர் புகழேந்தி கூறியதாவது:& சசிகலா இதுவரை பரோல் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. அவர் பரோலில் வரவும் விரும்பவில்லை. இன்று சசிகலாவை எம்.எல்..க்கள் யாரும் சந்திக்கவில்லை.

அவரை 15 நாட்களுக்கு ஒருமுறை தான் யாரும் சந்திக்க முடியும். தினகரன் சந்தித்து இன்னும் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் யாரும் சந்திக்க முடியும். தினகரன் சந்தித்து இன்னும் 15 நாட்கள் ஆகவில்லை. இதனால் சசிகலாவை எம்.எல்..க்கள் மட்டுமல்ல, வேறு யாரும் சந்திக்க முடியாது. 19 எம்.எல்..க்களும் ஒரே இடத்தில் தங்கி உள்ளனர். அவர்கள் பாதுகாப்பு கருதி அவர்கள் தங்கி உள்ள இடம் குறித்து எதுவும் கூறமுடியாது.  நாளை சென்னையில் நடக்கும் அ.தி.மு.. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு தினகரன் ஆதரவாளர்கள் யாரும் செல்ல மாட்டார்கள்அவர்கள்நடத்துவதுசட்டப்படிசெயற்குழு, பொதுக்குழு கூட்டமே அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.