Home சம்பவம் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட சசிகலா கணவர் நடராஜனுக்கு தீவிர சிகிச்சை

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட சசிகலா கணவர் நடராஜனுக்கு தீவிர சிகிச்சை

8
0
SHARE

சென்னை, செப். 12&

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட சசிகலா கணவர் நடராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.  .தி.மு.. பொதுச்செயலாளர் சசிகாலவின் கணவர் நடராஜன் கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார். 74 வயதாகும் அவருக்கு முதலில் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரடு சிறு நீரகங்களும் செயல் இழந்தன.

அவரது உடல் நலக்குறைவு மேலும் அதிகரித்தது. இதையெடுத்து அவர் பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கல்லீரல் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, தனி டாக்டர்கள் குழுவால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு சுமார் 8 மணி நேரம் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுது. இது குறித்து குளோபல் மருத்துவமனை சார்பில் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், ‘‘நடராஜனுக்கு கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகம் செயல் இழப்பு மற்றும் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது’’ என்று கூறப்பட்டுள்ளது. நடராஜனுக்கு கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால், அதற்கு பதில் மாற்று கல்லீரல் பொருத்த டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் நடராஜனுக்கு இன்னும் மாற்று கல்லீரல் கிடைக்கவில்லை.

கல்லீரல்  கோரி அவர் உடல் உறுப்பு தானம் பிரிவில் முன்பதிவு செய்துள்ளார். உரிய கல்லீரல் தானமாக கிடைத்தால்தான் அவருக்கு அதை பொருத்த முடியும். அதுவரை அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது. டாக்டர் முகம்மது ரிலா தலைமையிலான பல்நோக்கு மருத்துவர்கள் குழு நடராஜனின் உடல்நிலையை கண்காணித்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடராஜனுக்கு தீடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார். ஆனால் அதன் பிறகு அவருக்கு அடுத்தடுத்து உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கிய போது, நடராஜன் முக்கிய பங்கு வகிப்பார் என்று கருதப்பட்டது.

‘‘ .தி. மு.. வை வழி நடத்தும் தகுதி மன்னார்குடி குடும்பத்துக்கே உள்ளது’’ என்று அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே டி.டி.டி.வி. தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை நீக்க செய்து, அவர்களிடம் நடராஜன்தான் சமரசம் செய்து வைத்ததாக தகவல்கள் வெளியானது. இந்தநிலையில்திடீர்உடல்நலக்குறைவால்அவரதுசெயல்பாடுகள் முடங்கியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here