Home மற்றவை தமிழகத்தில் விரைவில் மாற்றம் வரும் விஜயகாந்த் பேச்சு

தமிழகத்தில் விரைவில் மாற்றம் வரும் விஜயகாந்த் பேச்சு

11
0
SHARE

திருப்பரங்குன்றம், செப். 12&

தமிழகத்தில் விரைவில் மாற்றம் வரும்என்று விஜயகாந்த் கூறினார்.

திருப்பரங்குன்றத்தில் தே.மு.தி.. நிர்வாகி இல்ல திருமணத்தை கட்சி நிறுவன தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டு நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி பேசுகையில் விஜயகாந்த் கூறியதாவது:&

.தி.மு.., தி.மு.. ஆகிய 2 கட்சிகளுமே தமிழக மக்களை வஞ்சிக்கிறது. அவர்கள் தேர்தல் நேரத்தில் ரூ.5000, ரூ.10,000 கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். பணம் கொடுத்தால் ஓட்டு வாங்கி விடலாம் என நினைக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஏமாந்து விடாதீர்கள். தமிழகத்தில் விரைவில் மாற்றம் வரும். அந்த மாற்றம் தே.மு.தி.. ஆட்சிக்கு வருவதாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசியதாவது:& .தி.மு.., தி.மு.. என்ற ஊழல் கட்சிகளுக்கு மாற்றாக உண்மைக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக தே.மு.தி.. உள்ளது என்பதை மக்கள் அறிவார்கள்.

ஆகவே தான் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். மக்கள் விரும்பும் சக்தியாக தே.மு.தி.. உள்ளது. போயஸ் தோட்டத்தை விட மாட்டேன் என் தீபாவும் ஆட்சியை தர மாட்டேன் என்று எடப்பாடியும் உள்ளனர். மக்களைப் பற்றி அவர் கவலைப்படவே இல்லை. ஆகவே தமிழக வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. அதை எதிர்க்கட்சியும் கண்டுகொள்ளவில்லை. மக்களுக்கான ஆட்சி, மக்கள் ஆட்சியாக தே.மு.தி..வால் உருவாகும். நாளை புதிய வரலாறு படைக்கும். இவ்வாறு பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here