Home தலையங்கம் வறட்சி, வெள்ளத்தை போக்க நதிகளை இணைக்கலாமே…

வறட்சி, வெள்ளத்தை போக்க நதிகளை இணைக்கலாமே…

8
0
SHARE

உ லகம்முழுவதிலும் ஏற்படும் பருவநிலைக்கு முக்கிய காரணம் இயற்கைதான். ஆனால் அதுவே மக்களுக்கு இடர்பாடுகளை ஏற்படுத்துவதுமனிதன் இயற்கையை அத்துமீறுவதாலா? இல்லை செயற்கைமயம் ஆகிக்கொண்டிருப்பதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவா என்பதுஇயற்கையின் கையில்தான் உள்ளது.

மூன்றுபக்கம்நீராலும்ஒருபகுதிநிலத்தாலும்சூழப்பட்டநாடுஇந்தியாஎன்றபோதும்,குடிப்பதற்கு தண்ணீரின்றி இறந்து போகும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு புறம் வறட்சியாலும், மறுபுறம்வெள்ளத்தாலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தண்ணீரில்லாத காரணத்தால் இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம்அழிவைத் தொட்டு மரணப்படுக்கையில் மன்றாடிக்கொண்டிருக்கிறது.

விவசாயம் என்ற உயிர்த் தொழில் அழிந்தால்பாதிக்கப்படுவது விவசாயிகள் மட்டுமா?…உலகில் உயிர்கொண்டுள்ள அனைவரும் தானே!. ‘‘ஒரு மரம் தோப்பாகாது’’,ஆனால் அதுவே தொடர் முயற்சி ஆகும் போது ஒரு காட்டையே உருவாக்கலாம். இப்படி அழிந்துகொண்டிருக்கும்விவசாயத்திற்கு முக்கிய காரணம் மழை இல்லாமைதான். அதற்கு காரணம், காடுகளை அழித்தல், இதற்கு காரணம் நகரமயமாதல், எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்த சங்கிலித் தொடர்பு,அதனால் இவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் போது ‘‘நகரமயமாதல், நரகமயமாதல்’’ ஆக மாறிவிடும்.

எல்லாம்அழிந்துவிட்டது, இதனை உணர்ந்து விளிம்பு நிலையிலாவது இருப்பதை பாதுகாக்க வேண்டும், இல்லையென்றால் வறட்சிதான்நிரந்தரம். மழைக்காலங்களில் வீடுகளில் மழை நீரை சேமிக்க சொல்லும் அரசு, நதிகளை இணைக்க மறுக்கிறது, பின் எப்படிவிவசாயம் செழிக்கும்?. நதிநீர் என்ற ஒரு திட்டத்தின் மூலம் வறட்சி வெள்ளம் இரண்டிலுமிருந்து மக்களை காப்பாற்றலாம்.வருங்காலத்தையும் வளமாக்கலாம். அணைகள் கட்டிவிட்டு நதிகளை இணைக்காமல் இருப்பதால் யாருக்கு என்ன பயன்வந்துவிடப்போகிறது.

மக்களுக்குநன்மைசெய்வதற்குதான்அரசு, பின் ஏன் நதிகளை இணைக்க மறுக்கிறார்கள். இந்தியா என்ற நாட்டில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் எனப்பிரிந்து இருந்தாலும், எல்லாம் ஒர் நாட்டுமக்கள் தான் என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த நான்கு மாநிலங்களும் ஒன்றிணைந்து நதிகளை இணைத்தால் மட்டுமேவெள்ளமும் வறட்சியும் தடுக்கப்படும். இயற்கையும் பாதுகாக்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஆண்டு தோறும் இந்தியாவில் எங்காவது ஒரு பக்கம் கடும் வெள்ளமும், மறுபக்கம் கடும் வறட்சியும் நிலவுகிறது. இதுபோன்ற சமயங்களில் இந்தியா முழுவதும் உள்ள நதிகளை இணைத்தாலே  மழை வெள்ளத்தை வறட்சி பகுதிக்கு திருப்பிவிட்டு வளம் காணலாம். ஆகவே உடனடியாக மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து இந்தியா முழுவதும் உள்ள நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here