Home மற்றவை மருத்துவப்படிப்பில் சேர நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள்...

மருத்துவப்படிப்பில் சேர நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

7
0
SHARE

சென்னை, செப். 12& சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ஜி. ஆர். ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:&

அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள கல்விக் கட்டணத்தை, அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கும் நிர்ணயிக்க வேண்டும். கூடுதலாக கட்டணம் வசூல் செய்யும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

தமிழக அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு, நீட்டிலிருந்து விலக்களிக்க வேண்டும். இந்த ஆண்டிற்கு தமிழகத்திற்கு கூடுதலாக 2,600  எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.

தமிழகஅரசின்ஒதுக்கீட்டுஇளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு வழங்கிட வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். மேற்கண்டவை உள்பட  பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள், பெற்றோர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு டாக்டர் ஜி. ஆர். ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here