Home தமிழகம் மாணவிஅனிதாகுடும்பத்துக்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல்

மாணவிஅனிதாகுடும்பத்துக்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல்

9
0
SHARE

அரியலூர், செப். 12& மாணவி அனிதா குடும்பத்துக்கு திரைப்பட நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறினார்

அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா, குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணவி அனிதா. இவர் பிளஸ் டூ தேர்வில் 1,176 தேர்வு பெற்ற போதிலும், நீட் தேர்வு பிரச்சனையால் மருத்துவம் படிக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்து தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குழுமூர் கிராமத்தில் அவரது வீட்டில் கடந்த 1ம் தேதி நடந்தது. இது தமிழக அளவில் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும், பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்துக்கு பல்வேறு பிரபலங்கள் சென்று அவரது பெற்றோர், சகோதரர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல், நேற்று காலை 10 மணியளவில், குழுமூர் கிராமத்தில் உள்ள அனிதாவின் வீட்டுக்கு திரைப்பட நடிகர் விஜய் சென்றார். அவர் அனிதாவின் அப்பா சண்முகம், அனிதாவின் சகோதரர் மணிரத்னம் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அனிதா குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதிஉதவி வழங்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here