Home சம்பவம் தமிழகம் முழுவதும் ஜாக்டோ &ஜியோ ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் ஜாக்டோ &ஜியோ ஆர்ப்பாட்டம்

6
0
SHARE

சென்னை, செப். 12&   ஜாக்டோ & ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் அரசின் எச்சரிக்கையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜாக்டோ & ஜியோ கூட்டமைப்பின் சார்பாக 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 22ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த்தில் ஈடுப்பட்டனர். அதனைத் தொடர்ந்தும் அரசுஅழைத்து பேசாததால்   கடந்த  7ந்  தேதி தொடர் வேலை நிறுத்தம் என்று அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அரசு மற்றும் முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதாதால் திட்டமிட்டப்படி 7ந் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டனர். இதனால் பள்ளிகள், அலுவலகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையே மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஜாக்டோ ஜியோஅமைப்பினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டம் நடத்த  தடை விதித்தது.

அதனையடுத்து 8ந் தேதி நடக்க இருந்த மறியல் போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஜாக்டோ & ஜியோ உயர்மட்டக் குழு சென்னையில் கூடியது. அந்த கூட்டத்தில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட ஜாக்டோ& ஜியோ அமைப்பிற்கு ஒருங்கிணைப்பாளர்களாக 6 பேர் நியமிக்கப்பட்டனர். மேலும் அந்த கூட்டத்தில் பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 7 வது ஊதியக்குழு சம்பளம் அளிக்கும் வரை இடைக்கால நிவாரணம் அளிக்க வேண்டும். நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.

மேலும் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், இன்று மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், 13ந் தேதி மாவட்டத் தலைநகரங்களில் காத்திருப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 7, 8ந் தேதிகளில் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் நோட்டீஸ்(17) அனுப்பப்பட்டது. அதில் அரசு விதிமுறைகளை மீறியுள்ளதாகவும், கோஷம் போடுகிறீர்கள், போராட்டம் நடத்துகிறீர்கள். அதனால் உங்கள் மீது ஏன் 17பி பிரிவின் கீழ் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க கூடாது என்று கேட்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்கும் 95 சங்கங்கள் பெயர்கள், முக்கிய பிரதிநிதிகள் பெயர்கள் அடங்கிய பட்டியலை ஜாக்டோ & ஜியோ செய்தித் தொடர்பாளர் தியாகராஜன் வெளியிட்டார்.

இது குறித்து ஜாக்டோ & ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: ஜாக்டோஜியோ அமைப்பில் தற்போது 95 சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது. 17ஏ நோட்டீஸ் அரசு அனுப்பியுள்ளது

அதேநேரம்  உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும், பணிக்கு திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, எஸ்மா போன்ற பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

கைது செய்து வழக்கு பதிந்து சிறையில் அடைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அரசு கடுமையாக எச்சரிக்கிறது.ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில்  திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடரும்  என  ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

சென்னை எழிலகத்தில் ஜாக்டோ & ஜியோ அமைப்பின் சார்பில் நேற்று நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்  மாயவன், வெங்கடேசன் உள்ளிட்ட 94 சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் எச்சரிக்கையை மீறியும் ஏராளமான ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறும்போது, ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கும் மதுரை உயர்நீதிமன்றம், அரசிற்கும் அறிவுரை வழங்க வேண்டும் என கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி,  சேலம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஜாக்டோ & ஜியோவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.  இதற்கிடையே, ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக, இன்று துவங்கும் காலாண்டு தேர்வை நடத்துவதில் பெரும்  சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும்ஆசிரியர்களுக்குவிளக்கம்கேட்டுநோட்டீஸ்அனுப்புவதற்குஎதிர்ப்புதெரிவித்துதிருக்கழுக்குன்றம்உதவித்தொடக்கக்கல்விஅலுவலர்தனதுபதவியைராஜினமாசெய்துள்ளதாகதெரிகிறது. அரசு நிதி நெருக்கடியில் உள்ளதால், பழைய ஓய்வூதிய திட்டத்தை, உடனே செயல்படுத்த முடியாத நிலை தொடர்கிறது.

அரசியல் ரீதியாக ஆளும் கட்சிக்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ள நிலையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தால், அரசு நிர்வாகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், போராட்டம் நீடித்தால், சட்டம்  ஒழுங்கு பிரச்னையும் ஏற்படும் என, மத்திய, மாநில உளவுத்துறைகள் எச்சரித்துள்ளன. அதனால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்படி, மத்திய உள்துறையும், முதல்வர் பழனிசாமி அரசை வலியுறுத்தி உள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here