Home சம்பவம் திருமண ஏக்கத்தால் விபரீதம் கிணற்றில்குதித்து அக்காள், தம்பி தற்கொலை

திருமண ஏக்கத்தால் விபரீதம் கிணற்றில்குதித்து அக்காள், தம்பி தற்கொலை

18
0
SHARE

சென்னை, செப். 12& சென்னை மணலி பகுதியில் தந்தை இறந்த சோகம், திருமணம் நடைபெறாத ஏக்கத்தில், அக்காள், தம்பி ஆகியோர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டனர்.சென்னை மணலி,  சின்னசேக்காடு கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது  மனைவி கற்பகம். இவர்களின் மகன்கள், பஞ்சாட்சரம்(42), நாகேந்திரன் (38), மகள் வேதநாயகி(41) ஆவர். அனைவரும் சின்ன சேக்காட்டில் , விவசாயம் செய்து வந்தனர்.

தங்களது தோட்டத்திலேயே வீடு கட்டி தங்கியிருந்தனர். பஞ்சாட்சரத்துக்கு மட்டும் திருமணமாகி விட்டது. நாகேந்திரனுக்கும், வேதநாயகிக்கும் திருமணம் நடைபெறவில்லை.பல தடவை முயற்சி செய்தும் அவர்களுக்கு திருமணம் கைகூடவில்லை. இதனால் இருவரும் விரக்தியில் இருந்தனர்.

இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு  இவர்களின் தந்தை சின்னராஜ் இறந்து விட்டார். தாய் கற்பகம் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். இதனால், இவர்களுக்கும் சிறிதளவில் மனம் பாதிக்கப்பட்டு, விரக்தி அதிகமானது. தாயும் இறந்து விட்டால் தங்களின்  எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என வருத்தம் அடைந்தனர். அதை தொடர்ந்து , நேற்று முன்தினம் இரவு, தங்களது தோட்டத்து கிணற்றில், வேதநாயகியும், நாகேந்திரனும் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். காலையில், தம்பி, தங்கையை காணாமல், பஞ்சாட்சரம் தேடினார்.

அவர்கள் கிடைக்க வில்லை. பின்னர் இருவரும் தோட்டத்து கிணற்றில் பிணமாக மிதப்பது தெரியவந்தது. தகவல் கிடைத்து,  மணலி போலீசார் , சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்மணலி தீயணைப்பு படையினர் வந்து, இரண்டு உடல்களை  மீட்டு,  பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து, மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.