Home தமிழகம் பதிவுத்துறை இணையதளம் மூலம் டி.இ.ஏ.எம். ஆவணப்பதிவு செயல்முறை பயிற்சி வி.ஐ.டி. பல்கலைவளாகத்தில்நடந்தது

பதிவுத்துறை இணையதளம் மூலம் டி.இ.ஏ.எம். ஆவணப்பதிவு செயல்முறை பயிற்சி வி.ஐ.டி. பல்கலைவளாகத்தில்நடந்தது

5
0
SHARE

சென்னை, செப். 12& பதிவுத்துறையில் இணையதள வழியாக டி...எம். (டோட்டல் இ.கௌ பேஸ்டு அட்மினிஸ்ட்ரேஷன் அண்டு மேனேஜ்மென்ட்) ஸ்டார் 2.0 ஆவணங்கள் பதிவு செய்வது குறித்து பதிவுத்துறை தலைவரின் வழிகாட்டுதலின்படி செயல்முறை பயிற்சி முதல் கட்டமாக ரெட்ஸில்ஸ் ராணி சங்குபதி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது2வது கட்டமாக வண்டலூர்கேளம்பாக்கம இடையே அமைந்துள் வி..டி. பல்கலைக்கழக வளாகத்தில் கூடுதல் பதிவுத்துறை தலைவர் அங்கையர்கண்ணி தலைமையில் பயிற்சி நடந்தது

சென்னை சரக துணைப் பதிவுத்துறை தலைவர் வி.வாசுகி, சென்னை சரக உதவிப் பதிவுத்துறை தலைவர் க.வடிவழகி, வடசென்னை மாவட்ட பதிவாளர் கே.கே.மஞ்சுளா, வடசென்னை மாவட்ட பதிவாளர் து.மணி, வடசென்னை பதிவு மாவட்ட சார்பதிவாளர்கள், பணியாளர்கள், ஆவண எழுத்தரகள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.

இதில் டி.சி.எஸ். கணினி மென்பொறியாளர் சந்தனா, துணைப் பதிவுத்துறை தலைவர் அலுவலக சார்பதிவாளர் ஜி.செல்வவிநாயகம் ஆகியோரால் கணினி வழி செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பில் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் தனிக்கணினியுடன் செயல்முறை பயிற்சி தனித்தனயாக வழங்கப்பட்டதுபயிற்சியின்போது இணையதள பதிவு குறித்து கோரப்பட்ட வினாக்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.

பயிற்சியில், பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், இணையதள கணினி பதிவு குறித்து வரவேற்பதாக தெரிவித்தனர். இந்த செயல்முறை பயிற்சி, ஒவ்வொரு கட்டமாக இனி தொடர்ந்து செயல்படும் என வடசென்னை மாவட்ட பதிவாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here