Home சுடச்சுட சாரண சாரணியர் இயக்க தலைவராக எச்.ராஜாவை தேர்ந்தெடுக்கும் முயற்சியை கண்டிக்கிறேன் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சாரண சாரணியர் இயக்க தலைவராக எச்.ராஜாவை தேர்ந்தெடுக்கும் முயற்சியை கண்டிக்கிறேன் மு.க.ஸ்டாலின் அறிக்கை

10
0
SHARE

சென்னை, செப்.12&  சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவராக எச்.ராஜாவை தேர்ந்தெடுக்க முயற்சிக்கும் அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என மு..ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு சாரண & சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவியை தமிழக பா... தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவிற்குத் தாரை வார்க்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் கூட்டுச்சதி செய்து கொண்டிருக்கின்றனர் என்ற செய்தி சாரண & சாரணியர் இடையேயும், நடுநிலையாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட நாட்களாகத் தேர்தல் நடைபெறாமல் இருந்த சாரண, சாரணியர் இயக்கத்தில் உள்ள இந்தப் பதவிக்கு வருகிற 16.9.2017 அன்று தேர்தல் நடைபெறகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் வாக்களித்து தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தப் பதவிக்கு   எச்.ராஜா போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எச்.ராஜாவிற்கு எதிராக முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநராக பணியாற்றி, பள்ளிக் கல்வியில் பழுத்த அனுபவம் பெற்றுள்ள மணி  போட்டியிட விரும்புகிறார் என்று தெரிந்ததும் அவர் ஆளுங்கட்சியின் சார்பில் மிரட்டப்பட்டுள்ளார். இப்போது வேறு வழியில்லாமல், முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளை  எச்.ராஜாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் சார்பில் மிரட்டப்படுகின்றனர். அவருக்கு வாக்களிக்கவில்லையென்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டத்திற்கு எதிரான முறையில் வாக்காளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.

எச்.ராஜாவைப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்க நினைத்து, செயல்பட்ட கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இப்போது போட்டி என்ற வந்தவுடன் கல்வித்துறையில் உள்ள அதிகாரிகள் மூலம் வாக்காளர்கள் மிரட்டப்பட்டு, .தி.மு.. நடத்தும் ஜனநாயகத்திற்குப் புறம்பான இடைத்தேர்தல்களைப் போலவே இந்தத் தேர்தலையும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் வருகின்றன. பா...வைச் சேர்ந்தவரை பதவியில் அமர்த்த அந்தத் தேர்தல் தொடர்பான விதிகள் எல்லாம் சர்வாதிகாரரீதியில் வளைக்கப்பட்டுள்ளன என்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

புதிய கல்விக் கொள்கை மூலம் அகில இந்திய அளவில் காவிக் கொள்கையையும், மதவாத கொள்கைகளையும் மாணவர்கள் இதயத்தில் புகுத்திவிட முயற்சிக்கும் மத்தியில் உள்ள பா... அரசு, தற்போது தமிழகத்தில் உள்ள சாரண, சாரணியர் இயக்கத்திற்குள்ளும் புகுந்து தமிழக மாணவர்கள் மனதில் காவிக் கொள்கையைப் புகுத்திக் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறது.

தன் கட்சியினருக்கு முக்கிய பதவிகளை பெறவே இப்படி அ.தி.மு..வின் அலங்கோல ஆட்சியை உள்கட்சி விவகாரம் என்று பா... கூறி வருகிறது என்பது, இப்போது வெட்டவெளிச்சமாகி விட்டது. .தி.மு..வின் அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை மூலமும், சி.பி.. மூலமும் ரெய்டுகள் நடத்தியது பா...வினருக்கு பதவி பெறுவதற்காகவே என்ற ரகசிய திட்டமும் இப்போது அம்பலத்திற்கு வந்துவிட்டது. ஊழல் அதிமுக அரசாங்கத்தில் பதவி பெற, இப்போது பா... பகிரங்கமாக முயற்சி செய்து கொண்டிருப்பது இந்த சாரண, சாரணியர் இயக்கத் தேர்தலில் ஊரறிந்த செய்தியாகி விட்டது.

ஆகவே, .தி.மு..  பா... பொருந்தாக் கூட்டணி மாநிலத்தின் கல்வி அமைப்பிலும், குறிப்பாக மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும் சாரண, சாரணியர் இயக்கத்திலும் நுழைய அனுமதித்து விட வேண்டாம் என்று வாக்காளர்களாக உள்ள கல்வியாளர்களையும், முதன்மைக் கல்வி அதிகாரிகள், மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோரையும் கேட்டுக் கொள்கிறேன் என அதில் கூறியுள்ளார்.