Home சுடச்சுட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது  சசிகலா , தினகரனை நீக்க தீர்மானம்?

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது  சசிகலா , தினகரனை நீக்க தீர்மானம்?

19
0
SHARE

தமிழகத்தில் நிலவும், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.. பொதுக்குழு சென்னை போரூர் வானகரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது. இந்த பொதுக்குழுவில், சசிகலா மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரனை நீக்கி தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பொதுக்குழு நடைபெறும் இடத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.

சென்னை, செப். 12&

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22&ம் தேதி திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஜெயலலிதா மரணம்

கடந்தடிசம்பர்மாதம் 5&ம் தேதி சிசிச்சை பலனின்றி ஜெயலலிதா உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிறகு அ.தி.மு.. பொதுச் செயலாளராக சசிகலா தலைமையேற்றார். தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார்இதை தொடர்ந்து, சசிகலா மீது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், . பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை திடீர் ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து, சசிகலாவை முதல்வராக்குவதற்கான பணிகள் நடைபெற்றன.

சசிகலாவுக்கு சிறை

ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். இதனால் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். கட்சி மற்றும் ஆட்சியை வழி நடத்த டி.டி.வி. தினகரனை, துணை பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்தார்.

இதைதொடர்ந்து, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வந்தது. அதில் டி.டி.வி. தினகரன் வேட்பாளாராக களம் இறங்கினார்தர்மயுத்தம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கேட்டு, தர்ம யுத்தம் தொடங்கிய ஓ. பன்னீர்செல்வம், ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளராக மதுசூதனனை நிற்க வைத்தார்இரு அணியினரும் அ.தி.மு..வையும், இரட்டை இலை சின்னத்தையும் சொந்தம் கொணடாடினர். இதனால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்ததுஇரண்டு அணிகளாக

அதை தொடர்ந்து, .பன்னீர்செல்வம், .தி.மு.. புரட்சி தலைவி அம்மா அணி என்றும்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, .தி.மு.. அம்மா அணி என்றும் ஆரம்பித்து இடைத்தேர்தலை சந்தித்தனர். பின்னர் பணம் பட்டுவாடா செய்ததை சுட்டிக்காட்டி ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது.

இந்தசூழலில்தான், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் டி.டி.வி. தினகரனை ஓரங்கட்டினர்இதனையடுத்து, .பன்னீர்செல்வம் விடுத்த கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அழைப்பு விடுத்தனர். இரு அணியும் ஒன்றாக இணைந்தது

துணைமுதல்வர் பதவி

.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதனை ஏற்க மறுத்த டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்..க்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்  முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று வெற்றி வேல், தங்கதமிழ் செல்வன் உள்ளிட்ட 19 எம்.எல்..க்கள் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர். ஆனால் அவர், உட்கட்சி விவாகரத்தில் தலையிட முடியாது என்று தெரிவித்தார்இன்று பொதுக்குழு

இந்த சூழ்நிலையில் அ.தி.மு.. பொதுக்குழு கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது. காலை. 10.35 மணியளவில், சென்னை, போரூர், வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்க 2,300 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், 750 செயற்குழு உறுப்பினர்கள் அடங்குவர். பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்தி முடிக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர்பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு போன் மூலமாகவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தடைவிதிக்க வழக்கு

இந்த நிலையில், பொதுகுழுவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் எம்.எல்.. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், உயர்நீதிமன்றம் , பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க முடியாது என தெரிவித்து விட்டதுஇந்தநிலையில், பொதுக்குழு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மற்றும் கமிஷனர் ஏ.கே. விசுவநாதனிடம், பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

சசிகலா நீக்கம்…?

மேலும், இன்று நடைபெறும் பொதுக்குழுவில், கட்சியை வழி நடத்தி செல்ல, வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும் என்று தெரிகிறது. சசிகலாவை நீக்கி அவர் நியமித்த டி.டி.வி. தினகரனை கட்சியில் இருந்து முழுமையாக நீக்கி வைக்கவும் தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகவும் தெரிகிறதுபொதுக்குழுவில் எடுக்கப்படும் முக்கிய தீர்மானங்களை வைத்து, இரட்டை இலையை மீட்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.