Home மருத்துவம் இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம்

19
0
SHARE

கண் ஒளியை அதிகரிக்க

பப்பாளி பல நோய்களை குணமாக்கவல்ல பழங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இது ஒரு சிறந்த கிருமிநாசினியும் ஆகும். சீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். கண் ஒளியை அதிகரிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.

குழந்தை நோய்களுக்கு

குழந்தைகளுக்கு ஏற்படும் பலவித நோய்களிலிருந்து நிவாரணம் பெற சிறிது வேப்பங் கொழுந்துடன் கொஞ்சம் மிளகு பூண்டின் ஒரு பல் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து நீரில் கலக்கி உள்ளுக்குள் ஊட்ட வேண்டும். இவ்வாறு அடிக்கடி கொடுத்து வர எந்தவித நோயும் தொல்லை கொடுக்காது.

ஆண்களின் தாது விருத்திக்கு

நல்முருங்கை, நறுந்தாளி, தூதுளம், பசலை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி ஆகியவற்றுடன் நெய், மிளகு, உப்புச் சேர்த்து துவையலாக அரைத்துச் சாப்பிட ருசியாக இருக்கும். ஆண்களின் தாது விருத்திக்கும் பலத்துக்கும் நல்லது.

சளியும் தும்மலும் போக

சளியும் தும்மலும் சிலருக்கு அடிக்கடி ஏற்பட்டு தொல்லை கொடுப்பதுண்டு. அதற்கு அகத்திக்கீரைச் சாற்றையும், அகத்திப்பூ சாற்றையும் எடுத்து தேனில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டால் போதும். சளியும் தும்மலும் போய்விடும்.

கை, கால்களில் உள்ள

வெடிப்புக்கு

சிலருக்குக் கைகளிலும், கால்களிலும், வெடிப்பு ஏற்பட்டு வலியும் தொந்தரவும் கொடுக்கும். அதற்கு கை வைத்தியமாக வெண்ணெயுடன் குங்குலியத்தைச் சேர்த்துக் கரைத்துக் வெடிப்புகளின் மேல் தடவி வர குணம் ஏற்படும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க

வயிற்றுக் கடுப்பு நீங்க தொட்டால் சிணுங்கி செடியின் இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு தயிரில் கலந்து சாப்பிட குணமாகும்.

பித்தத்துக்கு

கருவேப்பிலை எல்லா உணவுப் பொருள்களிலும் வாசனைக்காகவும், ருசிக்காவும் சேர்ப்பதுண்டு. ஆனால் அதை உணவுடன் சேர்த்து சாப்பிடாது தனியே எடுத்துப் போட்டு விடுவார்கள். இது தவறானது, கரு

வேப்பிலை பித்தத்தைக் கண்டிக்கும் குணமுள்ளது. மூலக் கொதிப்பு நோய் இருந்தாலும் அதனை குணப்படுத்தும் ஆற்றல் இதற்குண்டு.

ஒற்றைத் தலைவலிக்கு

ஒற்றைத் தலைவலி நீடித்து தொல்லை கொடுக்குமானால், மிளகு, பூண்டு, எட்டிக் கொழுந்து ஆகிய மூன்றையும் நல்லெண்ணெயில் இட்டு நன்றாக காய்ச்சி வைத்துக் கொண்டு தலைக்கு தேய்த்து ஸ்நானம் செய்து வந்தால் குணமாகும்.

நகச் சொத்தை நீங்க

சிலருக்கு நகங்களில் சொத்தை விழுவதுண்டு. அதற்குப் பொரித்த படிகாரப் பொடியை நீரில் குழைத்து கெட்டியாக அந்த நகங்களில் வைத்துக் கட்ட குணமாகும்.

ஹிஸ்டீரியா நோய்க்கு

ஹிஸ்டீரியா நோய் குணமாக எலுமிச்சைப் பழச்சாற்றில் சிறிது பெருங்காயத்தைச் சேர்த்துக் கலக்கி தினம் மூன்று வேளை சாப்பிட்டு வரலாம்.

வாய்ப்புண் ஆற

மணத்தக்காளியை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வருவது நல்லது. பொரியல் செய்தும் சாப்பிடலாம். பருப்பிலிட்டு வேக வைத்து கடைந்தும் சாப்பிடலாம். பருப்பிலிட்டு வேக வைத்து கடைந்தும் சாப்பிடலாம். இது வெப்பத்தைத் தணித்து புண்களை ஆற்றும் குணமுள்ளது. வாய்ப்புண், குடற்புண், வயிற்றுப் புண்களை எளிதில் ஆற்றும் அதனால் மணத்தக்காளியை தணலாற்றி என்றும் கூறுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here