Home மற்றவை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடினால்சஸ்பெண்ட் அரசு திட்டம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடினால்சஸ்பெண்ட் அரசு திட்டம்

17
0
SHARE

சென்னை, செப். 11&

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டால் சஸ்பென்ட் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதியஓய்வூதியதிட்டத்தைரத்துசெய்யவேண்டும், 8வது ஊதியக்குழுவை உடனே அமல்படுத்த வேண்டும், அதுவரை 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 7  ந்  தேதி  வேலை நிறுத்தம் மற்றும் சாலைமறியலில்  ஈடுபட்பட்டனர்.   

இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.   கிராமப்புற பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாததால் மாணவர்கள் பாடம் எதுவும் படிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில்   ஜாக்டோஜியோ போராட்டத்துக்கு தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைதொடர்ந்து, தமிழக அரசும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இருப்பினும், நீதிமன்றம் மற்றும் அரசு உத்தரவை மீறி ஜாக்டோஜியோ அமைப்பினர் தொடர்ந்து 8 ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையேஜாக்டோஜியோஅமைப்பின்  உயர்மட்ட குழு கூட்டம் சென்னையில் கடந்த 9 ந் தேதி   அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில்  நடந்தது. அந்த கூட்டத்தில்  ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் பிரதிநிதிகள் நீதிமன்ற உத்தரவையும் மீறி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது மற்றும் அரசு சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கம் கேட்டும் நோட்டிசுக்கு பதிலளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

  உயர்மட்ட குழு கூட்டத்தில்  எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி,  இன்று    (11ம் தேதி) அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.   12ம் தேதி மாவட்ட  ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும்.  இந்த 2 நாட்களில் அரசு   கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், வரும் 13 ந்  தேதி முதல் மாவட்ட அலுவலகங்களில்    காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.  இந்த கூட்டத்தில்  28 ஆசிரியர்கள் சங்கம், 64 அரசு ஊழியர்கள் சங்கம் என மொத்தம் 92 சங்கங்களை சேர்ந்த 7 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்த அமைப்பில் இருந்து போராட்டம் வேண்டாம் என கூறி சென்ற சங்கங்களின் தலைவர்களின் நிலைமை தற்பொழுது பெரும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. இதனால் அந்த அமைப்பில் இருந்து உறுப்பினர்கள் வேறு அமைப்பிற்கு மாறும் சூழ்நிலை ஏறப்பட்டுள்ளது. இதனால் அந்த சங்கங்களும் விரைவில் இவர்களுடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்ற திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில்கடந்த 7,8 ந் தேதிகளில் பணிக்கு வராதா ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சுமார் 77 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு பணியாளர் விதி எண் 17 ஏ வின்படி விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு பணியாளர் விதி எண் 17 ஏ வின்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொடக்கக்கல்வித்துறையில்பணியாற்றும்சுமார்

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பட்பட்டுள்ளது. மேலும் முறையற்ற வருகை புரியாதவர்கள் என்ற அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது. இதற்காக 17 ஏ விதியின்படி விளக்கம் கேட்கப்பட்டு, அதன் மீது சஸ்பெண்டு அல்லது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து ஜாக்டோ,ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியனிடம் கேட்டப்போது, அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்து ஏற்கனவே நாங்கள் ஆலோசித்துதான் அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளோம். பல்வேறு போராட்டங்களை நாங்கள் சந்தித்துள்ளோம். இவர்களின் மிரட்டலுக்கு பயப்படமாட்டோம். அரசு அளித்துள்ள நோட்டிசுக்கு விளக்கம் அளிக்கப்படும். ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்களின் கோரிக்கையை வென்றெடுக்க போட்டத்தில் கலந்துக்கொள்வார்கள். தற்பொழுது மேலும் பல சங்கங்கள் போராட்டத்தில் கலந்துக் கொள்ள வருகின்றனர் என தெரிவித்தார்.    

ஆசிரியர்களின் போராட்டம் நீடிப்பதால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு தொடங்க உள்ள நிலையில் ஆசிரியர்களின் இந்த போராட்டத்தால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதால் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு தேவைக்காக அதிகாரிகளை சந்திக்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here