Home சினிமா லாரன்ஸ் செய்த உதவி

லாரன்ஸ் செய்த உதவி

20
0
SHARE

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அறக்கட்டளையின் மூலம் நலிந்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவி செய்து வருகிறார்.  இந்நிலையில் மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு உதவி செய்திருப்பதாக தெரிகிறது.

தமிழ்த் திரையுலக இயக்குனர்கள் பலர் அரியலூருக்குச் சென்று அனிதா குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்கள். திரையுலகினர் சார்பில் அஞ்சலி கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசு அறிவித்த ரூபாய் 7 லட்சம் நிதியை அனிதா குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர். இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் அனிதா குடும்பத்துக்கு ரூபாய் 15 லட்சம் நிதி உதவி வழங்கி இருக்கிறார். இந்தத் தொகைக்கான காசோலையை லாரன்ஸின் உதவியாளர்கள் அரியலூர் சென்று அனிதா குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினார்கள். இதை வெளியில் தெரிவிக்கவேண்டாம் என லாரன்ஸ் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here