Home மற்றவை நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்; மெரினா கடற்கரையில் மாலையில் மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்; மெரினா கடற்கரையில் மாலையில் மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி

11
0
SHARE

சென்னை,  செப். 11&

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தை தொடர்ந்து மெரினா கடற்கரையில் மாலையில் மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அனிதா மரணம், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து  சென்னையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதனால் மெரீனா கடற்கரையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜல்லிகட்டு போராட்டத்துக்கு பிறகு மெரினாவில் எப்போதுமே போலீசார் உஷாராக  இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நீட்தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமானதால் மெரீனா கடற்கரை பாதுகாபு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. காலை நேரங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமாக இருக்கும் போது பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முன்கூட்டியே பொதுமக்கள் அனுமதிக்க திட்டமிடப்பட்டது.

நீட்தேர்வுவிவகாரம்விஸ்பரூபம்எடுத்தபின்னர்மெரீனாவில்தினமும் 100 போலீசாருக்கும் மேல் பாதுகாப்பு மணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா போலீசார் இணைந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், தென்சென்னை  கூடுதல் கமிஷ்னர் சாரங்கன், இணை கமிஷ்னர் மனோகரன் ஆகியோரது மேற்பார்வையில், துணை கமிஷனர் சரவணன் தலைமயிலான போலீசார் 24 மணி நேரமும் மெரீனாவில் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here