Home தமிழகம் ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

38
0
SHARE

கோவை, செப். 11&

விவசாயிகளின் பயன்பாட்டிற்காக ஆழியாறு அணையில் இருந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தண்ணீர் திறந்தார்.

கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆழியாறு பழைய ஆயக்கட்டின் ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஹரிஹரன், தலைமை வகித்தார். சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னிலை வகித்தார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விவசாயிகளின் பாசன பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, விவசாயிகளுக்கென அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது.

ஒரு போக விவசாயத்திற்காக பொள்ளாச்சி ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையினை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றதின் அடிப்படையில் முதலமைச்சர் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டார். அதனைத் தொடாந்து இன்று (நேற்று) முதல் பொள்ளாச்சி வட்டம், ஆழியாறு பழைய  ஆயக்கட்டின் ஒரு போக பாசனத்திற்கு 2018ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி வரை. 120 நாட்களுக்கு மொத்தம் 800 மி.. அடிக்கு மிகாமல், ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆழியாறு, கோட்டூர், ஆணைமலை ஆகிய பகுதிளுக்கு உட்பட்ட விவசாயிகளின், விவசாய பயன்பாட்டிற்கு ஏதுவாக இந்த தண்ணீர் திறப்பு அமையும். இதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு விவசாயிகள் பயனடைய வேண்டும்.

விவசாயிகளுக்குவண்டல்வழங்குவதற்காகஅனைத்துஏரி, குளங்களிலும் தூர்வாரும் பணி கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இதன் மூலம் நல்ல சத்துடன் கூடிய வண்டல் மண் விவசாயிகளுக்கு கிடைப்பது மட்டுமல்லாமல் அனைத்து குளங்களும் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அன்னூர், அத்திகடவு அவிநாசி கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

மேலும்கழிவுநீரைசுத்திகரிப்புசெய்துஅதனைமறுசுழற்சிமுறையில்விவசாயத்திற்குபயன்படுத்திடஆய்வுகள்மேற்கொள்ளப்படநடவடிக்கைஎடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

நிகழ்ச்சியில் வால்பாறை எம்.எல்.. கஸ்தூரிவாசு, பொதுப்பணித்துறை நிர்வாக ஆதாரம் செயற்பொறியாளர் கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் நரேந்திரன், கருணாகரன், ஆழியாறு பழைய ஆயக்கட்டின் பாசன சங்க செயலாளர் பட்டீஸ்வரன், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.