Home இந்தியா டி.வி வீடியோ நிகழ்ச்சிகளுக்காக 100 கோடி டாலர் முதலீடு செய்ய பேஸ்புக் திட்டம்

டி.வி வீடியோ நிகழ்ச்சிகளுக்காக 100 கோடி டாலர் முதலீடு செய்ய பேஸ்புக் திட்டம்

14
0
SHARE

சான்பிரான்சிஸ்கோ, செப். 11&

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான  டி.வி வீடியோ நிகழ்ச்சிகளுக்காக 100 கோடி டாலர் முதலீடு செய்ய பேஸ்புக்,இருக்கிறது. புதிய ஒரிஜினல் டி.வி நிகழ்ச்சிகளை உருவாக்குவதற்காக இந்த முதலீடு செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வீடியோ நிகழ்ச்சிகளில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் முதலீடு செய்ததை விட குறைவாகவே பேஸ்புக் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் மட்டும் வீடியோ நிகழ்ச்சிகளுக்காக 600 கோடி டாலர் முதலீடு செய்திருக்கிறது. நெட்பிளிக்ஸ் தவிர அமேசான் நிறுவனம் இந்த ஆண்டில் 450 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. வீடியோ நிகழ்ச்சிகளின் உள்ளடக்கத்தை மாற்றுவது போன்ற உத்திகளை பேஸ்புக் நிறுவனம் எடுத்து வருகிறது. அதாவது டுடேஸ் ஸ்பாட்லைட், நியூ திஸ் வீக் போன்ற புதுப்புது வீடியோக்களை பிரித்து வைத்துள்ளது. மேலும் தற்போது பேஸ்புக் நிறுவனம் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here