Home தமிழகம் நீட் தேர்வில் நிரந்தர விலக்கே தமிழகத்திற்கு தேவையானது கி.வீரமணி வலியுறுத்தல்

நீட் தேர்வில் நிரந்தர விலக்கே தமிழகத்திற்கு தேவையானது கி.வீரமணி வலியுறுத்தல்

34
0
SHARE

சென்னை, ஆக. 14& நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு பெறுவதைவிட   நிரந்தரமான விலக்கு என்பதே தமிழ்நாட்டிற்குத் தேவை என வீரமணி  வலியுறுத்தி உள்ளார்இது குறித்து  திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறியதாவது:

நீட் விவகாரத்தில் மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு நோயாளிக்கு முதலுதவி அளிப்பது போன்றதே. அந்த வகையில் வரவேற்கத்தக்கதே.  அதேநேரத்தில் நீட் நுழைவுத் தேர்வு அறவே கூடாது என்பதே தமிழ்நாட்டின் நிலை. இந்தியாவிலேயே சமூக நீதித் திசையில் முன்னுதாரணமான மாநிலம் தமிழ்நாடு. இங்கு 69 சதவீத இடஒதுக்கீடு என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் பாதுகாப்புப் பெற்றிருப்பது  இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான். இந்தப்பிரச்சினையில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு அதிக அக்கறை கொண்டதாகும்.

2007முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கிடையாது. அதற்கான சட்டமும் இயற்றப்பட்டது.கல்வி பொதுப்பட்டியலில் உள்ள நிலையில், நீட் தேர்வு குறித்து மாநில அரசின் கருத்து கேட்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு கேட்கப்படாமல் தன்னிச்சையாக மத்திய அரசு நீட்டைத் திணிப்பது சட்ட விரோதமானது,  நியாய விரோதமானது.

கிராமப்புற, நகர்ப்புற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். இந்தியா முழுவதும் ஒரே வகையான கல்வி இல்லாத நிலையில் சிபிஎஸ்இ கல்வித்திட்ட அடிப்படையில் வினாத்தாள் தயாரிப்பது எப்படி சம வாய்ப்பும், சம நீதியும் ஆகும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.   

சமூகநீதி கோருவது சலுகையல்ல. சட்டப்படியானது. மாநில அரசு இந்த ஆண்டு அதைப் பெற்றாலும்கூட,  அதோடு நிறுத்தி விடக் கூடாது. ஆனால், ஒன்று, இதுவரையிலே அந்தக் கோப்புகள் எங்கிருக்கின்றன என்று தெரியாது என்று சொன்ன அமைச்சர் இப்போது ஓராண்டுக்கு விதிவிலக்கு கொடுப்போம் என்று சொல்லும்போது மக்கள் சக்திக்கு இருக்கின்ற மரியாதையை இதன் மூலம் உணர்ந்து கொண்டிருக்கிறார் என அவர் தெரிவித்தார்.