Home தமிழகம் கோவையில் பசுமை கோவையை உருவாக்க, மராத்தான் போட்டி1300 பேர் பங்கேற்பு

கோவையில் பசுமை கோவையை உருவாக்க, மராத்தான் போட்டி1300 பேர் பங்கேற்பு

42
0
SHARE

கோவை, செப். 11 &

பசுமை கோவையை உருவாக்க மராத்தான் போட்டிகள் நடைபெற்றது. இதில் சுமார் 1300 பேர் பங்கேற்றனர்.

கோவை மாவட்டம் கோவைபுதூர் ரன்னர்ஸ் கிளப், கோவைப்புதூர்ஆர்கிட்கேட்டேட்கம்யூனிட்டிராகிண்டோஆகியவைஇணைந்துமராத்தான்

போட்டியை நேற்று நடத்தின. போட்டிகளை ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், பிரபு, பீட்டர், ஸ்.கவிப்ரியா, ரீனா, மாயா, பிரிஸில்லா, மேரி, வீரபாண்டி, எஸ்.ஆறுமுகம் ஆகியோர் துவக்கி வைத்தனர். 5 கி.மீ, 10 கி.மீ, 21 கி.மீ, 42 கி.மீ. பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. 42 கி.மீ. தொலைவு மராத்தான், கோவையில் நடைபெற்ற முதல் மராத்தான் போட்டியாகும். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள், முதியோர், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் என சுமார் 1300 பேர் பங்கேற்றனர். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர்கள் சி.ராஜசேகர் கூறுகையில், பசுமையான கோவைபுதூரை உருவாக்குவதுதான் இந்தப் போட்டிகளின் பிரதான நோக்கம். கடந்த சில ஆண்டுகளாக கோவைபுதூர் தனது பசுமையை இழந்து வருகிறது. இதற்கு வேகமான நகரமயமாக்கலே முக்கியக் காரணமாக உள்ளது. பசுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த மராத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன என்றார். போட்டிகளில் சுமார் 1300 பேர் பங்கேற்றுள்ளனர். 8 வயது குழந்தை முதல் 80 வயது முதியோர் வரை பங்கேற்று ஓடினர்

. மேலும், கென்யா நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவர்களும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றனர். போட்டிகளில் பங்கேற்றோருக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். லையன்ஸ் கிளப்பை சேர்ந்தவர்கள் 5 கி.மீ. தொலைவு மராத்தான் போட்டியை துவக்கி வைத்தனர். கோவைபுதூரில் துவங்கிய இந்தப் போட்டிகள், சி.பி.எம் கல்லூரி, பஞ்சாரா ஹில்ஸ், ஜெ.ஆர்.டி ஹில்ஸ் ஆகியவை வழியாக சென்றது. இந்தப் போட்டியில் பங்கேற்றோருக்கு டீசர்ட்டுகள் வழங்கப்பட்டது. மேலும் போட்டியின் இலக்கை வெற்றி கரமாக எட்டிய நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

போட்டிகளில்முதல்மூன்றுஇடங்களைவென்றோருக்குரூ.1.8 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் தொழிலாளர் துறை அமைச்சர் டி.எம். அன்பரசன், நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்.பி.கிருஷ்ணகுமார், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி வெற்றி பெற்றவர்களை கௌரவித்தனர்.