Home அரசியல் நீட் தேர்வுக்கு ஒரு வருடம் விலக்களிக்க மத்திய அரசு தயாராக உள்ளது கடலூரில் பொன்....

நீட் தேர்வுக்கு ஒரு வருடம் விலக்களிக்க மத்திய அரசு தயாராக உள்ளது கடலூரில் பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

42
0
SHARE

கடலூர், ஆக. 14& நீட்தேர்வுக்கு ஒரு வருடம் விலக்களிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று கடலூரில் பொன்ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடலூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தமிழ்நாட்டில்  மாநில பாடத்திட்டத்தின் கீழ்  95 சதவீத மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில்  பெரும்பாலானோர்  கிராமப்புற மாணவர்கள். இந்நிலையில் தங்களுக்குக் கிடைக்கும் பயிற்சியின் அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவு  தேர்வுகளை எழுவது கடினம். இதனால் அவர்களுக்கு மருத்துவப்படிப்பு படிக்கும் வாய்ப்பு  கிடைப்பது கடினமாகி விடுகிறது.

தமிழக மாணவர்களின் நலன் கருதி  நானும்  மத்திய அமைச்சர் நிர்மலாசீத்தாரமனும் பல்வேறு  முயற்சிகள்  எடுத்து,  மத்திய அமைச்சர்களுடன்  பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். மாநில அரசு சாதகமான முடிவுகள் எடுத்து தங்களது கோரிக்கையை வைத்தால் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஓராண்டிற்கு விலக்கு அளித்திட மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.தொடர்ந்து அவர் பேசுகையில், அதிமுகவில் 3 அல்ல 4 அணிகள் உள்ளன. அவர்கள் உருவாக்கிய பிரச்னை, அவர்களே தீர்த்து கொள்ள வேண்டும். இதில் பாஜக தலையிடாது. மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்தால்   பெயர் பிரபலமாகும் என்ற எண்ணத்தில்  சிலர்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அரசு கொண்டு வரும் திட்டத்தால் அதிக பலன் கிடைக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். குறைந்த கஷ்டத்திற்காக நீண்ட கால பலனை விட்டுவிடக் கூடாது. தமிழகத்தில் தற்போதுள்ள 6 ஆயிரம் கி.மீ தேசிய நெடுஞ்சாலையை இருமடங்காக்கும் வகையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். உடன் பா..க நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.