Home சுடச்சுட பினாமி பெயரில் நிலத்தை விற்று பிரியங்கா கணவர் மோசடி சி. பி. ஐ. விசாரணை

பினாமி பெயரில் நிலத்தை விற்று பிரியங்கா கணவர் மோசடி சி. பி. ஐ. விசாரணை

15
0
SHARE

ஜெய்ப்பூர், செப். 11&

     டிரைவர், மெய்க்காப்பாளரை பயன்படுத்தி பினாமி பெயரில் நிலத்தை விற்று மோசடி பிரியங்கா கணவரிடம் சி.பி.. விசாரணை நடத்தி வருகிறது.

  ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்த போது, சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா 110  ஏக்கர் அரசு நிலத்தை மோசடியாக பெற்று அதை இன்னொரு நிறுவனத்துக்கு விற்று பல கோடி சம்பாதித்ததாக புகார் கூறப்பட்டது.

   அது சம்பந்தமாக சி.பி.. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதில், ராபர்ட் வதேரா எப்படி எல்லாம் மோசடி செய்திருக்கிறார் என்ற விவரங்கள் கிடைத்துள்ளன.

   ராஜஸ்தான் மாநிலம் பிகேனர் மாவட்டத்தில் 2007&ம் ஆண்டு இந்த மோசடி நடந்தது. அரசுக்கு சொந்தமான 110 ஏக்கர் நிலத்தை சிலரின் பெயருக்கு அரசு   

ஒதுக்கீடு செய்தது.

  அந்த நிலத்தை ராபர்ட் வதேராவின்ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டிஎன்ற நிறுவனம் வாங்கியது. பின்னர் அந்த நிறுவனம்அலஜினி பின்லீஸ்என்ற நிறுவனத்துக்கு விற்று மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

   இந்த நிலம் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு ராபர்ட் வதேராவின் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

  அதில், ஒரு பிரிவு நிலத்தை நாதராம், ஹரிராம் ஆகியோருக்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக காட்டப்பட்டுள்ளது. பின்னர் அந்த நிலத்தை மற்றொரு தரப்பினருக்கு விற்றதாக காட்டி உள்ளனர்.

  இவ்வாறு 50  ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. நிலம் வாங்குவதற்காக போலியான ஆவணங்களை தயாரித்து கொடுத்துள்ளனர். அடுத்ததாக மற்றொரு இடத்தில் 60  ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. போலி ஆவணங்கள் மூலம் இந்த ஒதுக்கீடு நடத்துள்ளது.

  இந்த நிலத்தை ராபர்ட் வதேராவின்ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டிநிறுவனம் வாங்கி இருக்கிறது. அந்த நிறுவனம் நேரடியாக இந்த நிலத்தை வாங்கவில்லை. அதற்கு பதிலாக மகேஷ் நாகர் என்பவர் பெயரில் பினாமியாக வாங்கப்பட்டுள்ளது.

   மகேஷ்நாகர், ராபர்ட்வதேராவின் மெய் காப்பாளர் ஆவார்.

  பின்னர் அந்த சொத்தைஅலர்ஜி பின்லீஸ்நிறுவனத்துக்கு ரூ. 2 கோடியே 81 லட்சத்துக்கு விற்றதாக காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு ரூ. 45 கோடி அளவுக்கு நிலம் விற்கப்பட்டுள்ளது.

இந்தவிவரங்களைசி.பி.. முழுமையாக கண்டுபிடித்துள்ளது. இது சம்பந்தமாக அனைத்து தரப்பினரிடமும் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

   ராபர்ட் வதேராவிடமும் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பி உள்ளனர். விரைவில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று சி.பி.. அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here