Home மற்றவை ரசாயன ஆயுதங்களால் தாக்குதல் நடத்த திட்டம் உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து விமானம் , ரயில்...

ரசாயன ஆயுதங்களால் தாக்குதல் நடத்த திட்டம் உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து விமானம் , ரயில் நிலையங்களில் சோதனை

21
0
SHARE

சென்னை, செப். 11&

ரசாயன ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக,

உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, விமானம் மற்றும் ரயில் நிலையங்களில்  போலீசார் சோதனை நடத்தினர்.

பொது மக்கள் பயணம் செய்யும் பேருந்துகள்,  ரெயில் மற்றும் விமானங்களில் தீவிரவாதிகள் ரசாயன வாயுக்களை கொண்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பதாக, உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மத்திய உள்துறை சார்பில், அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,  வர்த்தக ரீதியிலான விமானங்கள் மற்றும் பொது மக்கள் அதிக அளவில் பயணம் செய்யும்போக்குவரத்து சாதனங்களை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது. ரசாயனபவுடர்கள்பூச்சிகொல்லிமருந்துகள்மற்றும்திராவகம்உள்ளிட்டபொருட்களைபயன்படுத்திநாசக்காரஆயுதங்களை

தீவிரவாதிகள் தயாரித்து இருப்பதாகவும், குடிநீர் உள்ளிட்ட உணவு பொருட்களில் விஷம் கலக்கலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த சதித்திட்டத்தை முறியடிக்க மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் விமான நிலைய பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இதைப் பின்பற்றி போக்கு வரத்து துறைகளில் மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். வளைகுடா விமானத்தில் இதுபோன்ற ரசாயன குண்டுகளை வைப்பதற்கு செய்த சதி திட்டத்தை விமான பாதுகாப்பு படையினர் முறியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதை தொடர்ந்து, சென்னையில், முக்கிய ரயில் நிலையங்களான  சென்ட்ரல், எழும்பூர் மற்றும்  கோயம்பேடுபேருந்துநிலையம்மற்றும்மீனம்பாக்கம்விமானநிலையத்தில்கடும்சோதனைக்

கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த வகையில் அனைத்து மாநிலங் களும் உஷார் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும்  மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்த ரெயில்களில் ஏறி போலீசார் சோதனை நடத்தினார்.

ஆங்காங்கே மோப்ப நாய்களும் சுற்றித்திரிந்தன.இதனால் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.