Home சிறப்புச் செய்திகள் இளைஞர்களுக்கான ஹாம் வானொலி 

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி 

66
0
SHARE

ஒரு சில நண்பர்கள் என்னிடம் பல முறை கேட்ட கேள்வி, ஹாம் வானொலி நிலையம் தொடங்குவதால் என்ன நன்மை? இவர்களுக்கான பதில் வந்து பாருங்கள். இது சொல்லித் தெரிய வைக்க முடியாது. பல வகைகளில் உங்களின் நேரத்தினை வீணாக்குகிறீர்கள், ஆனால் இதில் நேரம் வீண் ஆகாது, மாறாக புதிய சர்வதேச நட்புகள் கிடைக்கும். அத்துடன் புதிய தொழில்நுட்பங்கள் பலவற்றைக் கற்றுக்கொள்ள வாய்ப்பாக இது அமையும்.

மன்றங்களின்நன்மை

அமெரிக்க ரிலே லீக் மன்றமானது தனது உறுப்பினர்களுக்கு பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்த மன்ற உறுப்பினர்கள் அமெரிக்கா மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளிலும் உள்ளனர். உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கும் பல பயனுள்ள தகவல்களை வழங்குகிறது, இவர்களின் இணைய தளம். கீ1கிகீ எனும் ஹாம் வானொலி தொடர்ந்து ஹாம் வானொலி நேயர்களுக்காக ஒலிபரப்பாகி வருகிறது.

ஆபத்துகாலத்தில் ஹாம்: இயற்கை சீற்றங்களின் போது, ஹாம் வானொலியின் செயல்பாடுகள் அபரிமிதமானது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மணி நேரங்கள் ஆபத்துகாலங்களில் உதவி தேவைப்படுபவர்களுக்கு ஒலிபரப்பி வருகிறது. நாடு முழுவதும் உள்ள ஏ.ஆர்.ஆர்.எல்.ஹாம்கள், ஆபத்துகளின் தன்மை, இயற்கை சீற்றங்களின் தன்மைக்கு ஏற்ப ஒலிபரப்புகளை செய்வதற்கான உதவிகளை செய்கின்றனர்.

.ஆர்.ஆர்.எல். ஹேண்ட் புக்: உலகின் அனைத்து ஹாம்களுக்கும் ஒரு கலைக்களஞ்சியம் என்றால், அது.ஆர்.ஆர்.எல். ஹேண்ட் புக்மட்டுமே. 90 வருடங்களுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் பல புதியத் தகல்களைக் கொண்டு வெளிவருகிறது. ஹாம் வானொலியினர் மட்டுமல்லாது, டெலிகாம் துறையில் இருப்பவர்களும் தவறாமல் படிக்கும் புத்தம் தான் இந்த ஏ.ஆர்.ஆர்.எல். ஹேண்ட் புக். இந்த புத்தகத்தினை ஷ்ஷ்ஷ்.ணீக்ஷீக்ஷீறீ.ஷீக்ஷீரீ/sலீஷீஜீ எனும் முகவரியில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

தொழில்நுட்பத் தகவல்கள்: இன்று ஹாம் வானொலித் தொடர்பான தொழில்நுட்பத் தகவல்களை வழங்குபவர்கள் குறைந்து விட்டனர். .ஆர்.ஆர்.எல். மன்றமானது ஏராளமான கைடுகள், கருத்தரங்க மலர்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களை ஹாம் வானொலிச் சார்ந்து வெளியிட்டு வருகிறது.

ஹாம் விழிப்புணர்வு: .ஆர்.ஆர்.எல். பள்ளி மாணவர்கள் மத்தியில் உள்ள ஸ்கவுட் குழுக்களுடன் இணைந்து செயல்படுகிறது. ஜம்போரே போன்ற நிகழ்வுகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு மெரிட் பேட்ஜ் போன்றவற்றை வழங்குகிறது. வயர்லஸ் டெக்னாலஜியில் படிக்கும் ஆசிரியர்களுக்கும் ஹாம் தொடர்பான வகுப்புகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

சிறப்புக் குழுக்கள்

ஹாம் வானொலி என்பது ஒரு பெரிய, விரிவான மற்றும் ஆழமானதொரு அமைப்பாகும். ஹாம் வானொலியில் பல்வேறு வகையான நடவடிக்கைகளும் ஒலிபரப்புகளும் செய்யப்பட்டு வருகின்றன.  ஹாம் வானொலியில் பல்வேறு வகையான சிறப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஹாம் வானொலியும், நேயரின் விருப்பத்தினைப் பொருத்து அவரவருக்கு தேவையான குழுக்களில் இணைந்து செயல்படுகின்றனர். குறிப்பாக தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும், ஒலிபரப்பின் அடிப்படையிலும் குழுக்கள் பிரிக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் இதற்காகவே சிறப்பு குழுக்கள் செயல்பட்டுவருகின்றன.

ஒரு சில குழுக்கள் ஒரு குறிப்பிட்ட விருதினைப் பெருவதற்காக இயங்குகின்றன. இன்னும் ஒரு சில குழுக்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் மட்டுமே நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொள்வதையே முதன்மையான நோக்கமாக கொண்டு செயல்படுகின்றன. குறிப்பாகபத்துக்கு பத்து’ (ஷ்ஷ்ஷ்.tமீஸீtமீஸீ.ஷீக்ஷீரீ) எனும் குழுவினைச் சொல்லலாம். இந்த குழுவானது 10 மீட்டரில் மட்டுமே இயங்கக்கூடியது ஆகும். உலகின் எந்த நாட்டில் இந்த பத்து மீட்டர் அலைவரிசையில் போட்டி வைத்தாலும் இந்த குழுவானது கலந்து கொள்ளும்.

குறைந்த சக்தியில் சிறிய நிலையங்கள் இந்த பத்து மீட்டர் குழுவினை நடத்துகின்றன. பல்வேறு போட்டிகளையும் இந்த குழுவானது நடத்தி பல உயரிய பரிசுகளை தனது நேயர்களுக்கு வழங்குகிறது. இதே போன்றே ஆறு மீட்ட்ரில் இயங்கக்கூடிய குழுவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ‘சிக்ஸ் மீட்டர் இண்டர்நேசனல் கிளப்’ (ஷ்ஷ்ஷ்.sனீவீக்ஷீளீ.ஷீக்ஷீரீ) என்னும் பெயரில் இந்த குழுவானது இயங்கிவருகிறது. வழக்கமான ஒலிபரப்புகளில் இருந்து மாறுபட்டு செய்யப்படும் ஒலிபரப்புகளையும் இந்த குழுவானது சிறப்பாக செய்து வருகிறது. இந்த பகுதியில் ஒரு சில குழுக்களை மட்டுமே பார்த்தோம், இது போன்று இன்னும் ஏராளமான குழுக்கள் உள்ளன. தேடுங்கள், நிச்சயம் மற்றும ஒரு சுவாரஷ்யமான குழு உங்களுக்கு கிடைக்கும்.

வானொலி விளையாட்டுகள்

பொதுவான விளையாட்டுகளை நாம் அறிவோம், அது என்ன வானொலி விளையாட்டு. வானொலியில் பல்வேறு போட்டிகள் வைக்கப்படுகின்றன. அவற்றை விளையாட்டு என்று சொல்ல முடியாது. குறிப்பாக பொது அறிவுப்போட்டி, இசைப் போட்டி, நாடகப் போட்டி என பல உண்டு. ஆனால் இந்த வானொலி விளையாட்டு என்பது முற்றிலும் வேறுபட்டது. ஒரு சில சர்வதேச வானொலி மன்றங்கள் தனது உறுப்பினர்களுக்கு, யார் மிக அதிகமான வானொலிகளை குறிப்பிட்ட நாட்களில், வாரத்தில், மாதங்களில் கேட்கிறார்களோ, அவர்களுக்கு பல வகையான போட்டிகளை வைத்து அதிக விலை கொண்ட வானொலிப் பெட்டிகளை பரிசாக கொடுக்கின்றனர்.

ஹாம் வானொலிகளில் போட்டிகள் வைப்பதற்கு என்றே பல தனி மன்றங்கள் செயல்பட்டு வருகிறது. வானொலி ஒலிபரப்புகளை மையப்படுத்தியே இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் போட்டிகள் நடப்பது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒலிபரப்பி, அந்த ஒலிபரப்பினை கேட்க செய்வது என  இது போன்ற போட்டிகளையே வானொலி விளையாட்டு என்கின்றனர். இந்த போட்டிகள் துணை கொண்டு புதிய ஹாம்களை ஊக்குவித்து அவர்களையும் வானொலிப் போட்டிகள் நடத்த வைப்பதுவும் ஒரு நோக்கமாக இதில் இருந்துவருகிறது.

உலகின் பல பகுதிகளில் உள்ள ஹாம் மன்றங்கள் பல்வேறு போட்டிகளை வருடம் தோறும் நடத்திவருகின்றன. இந்த போட்டிகளில் கலந்து கொண்டு பல உயரிய பரிசுகளைப் பெருவதுடன், நல்ல நட்புகளும் கிடைக்கின்றன. இது போன்ற போட்டிகள் எங்கு, யாரால் நடத்தப்படுகின்றன போன்ற விபரங்கள் நிறைய ஹாம்களுக்கு தெரிவதே இல்லை. இதனால் அவர்களால் போட்டிகளில் கலந்து கொள்ள முடிவதில்லை. அந்த குறையைப் போக்குகிறது ஏர்.ஆர்.ஆர் எல். உலக அளவில் மாதம் தோறும் நடக்கும் ஹாம் போட்டிகளின் அட்டவணையை ஷ்ஷ்ஷ்.ணீக்ஷீக்ஷீறீ.ஷீக்ஷீரீ/நீஷீஸீtமீstநீறீuதீறீவீst எனும் முகவரியில் சென்று பார்த்து, அவற்றில் கலந்துகொள்ளலாம்.

ஒரு சில டி.எக்ஸர்கள் உலகின் அனைத்து நாடுகளில் உள்ள ஹாம் வானொலிகளையும் தொடர்பு கொள்ள வேண்டும் என்று எண்ணுவர். அதேப் போன்று அனைத்து நாடுகளில் இருந்து ஒலிபரப்பாகும் சிற்றலை வானொலிகளையும் தொடர்பு கொள்ள முயற்சிப்பர். இது போன்ற போட்டிகள் இன்னும் சுவாரஷ்யம் நிறைந்தது. இன்னும் ஒரு சில ஹாம்கள் உலகம் முழுவதும் சுற்றி, அந்த நாடுகளில் இருந்து வானொலி ஒலிபரப்புகளைக் கேட்பர். மற்றும் சிலர் டி.எக்ஸ்.பெடிசன்களிலும் கலந்து கொண்டு பல்வேறு நாடுகளின் ஒலிபரப்புகளை கேட்பர்.

டி.எக்ஸர்களே ஹாம்களாகவும் இருப்பர், ஒரு சில நேரங்களில் ஹாம்களும் டி.எக்ஸர்களாக இருப்பர். பொதுவாக தொலைதூர வானொலி ஒலிபரப்புகளைக் கேட்பவர்களை டி.எக்ஸர்கள் என்று கூறிவருகிறோம். அப்படியான டி.எக்ஸிங். செய்பவர்கள் அடுத்த கட்டமாக ஹாம் உரிமம் பெற்று ஒலிபரப்பவும் செய்கின்றனர். உலகம் முழுவதும் ஹாம் மன்றங்கள் போன்றே டி.எக்ஸ். மன்றங்களும் உள்ளன. அந்த மன்றங்களின் விபரங்களை ஷ்ஷ்ஷ்.பீணீவீறீஹ்பீஜ்.நீஷீனீ/நீறீuதீs.லீtனீ எனும் முகவரியில் சென்று அறிந்துகொள்ளலாம்.

ஹாம் பள்ளி

ஹாம் வானொலி பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டவர்களுக்கு பல அமைப்புகள் உதவி செய்து வந்தாலும், ஹாம் வானொலி உரிமம் வைத்திருப்போரின் எண்ணிக்கை அவ்வளவு ஒன்றும் சிறப்பாக இல்லை. அதற்கு காரணம், இது பற்றிய அறியாமை இன்றும் உள்ளது. அதனை போக்குவதற்கு இன்று நமக்கு கைக்கொடுப்பது சமூக ஊடகங்கள். அந்த வகையான ஊடகங்களின் துணை கொண்டு இளைஞர்கள் மத்தியில் ஹாம் வானொலியைக் கொண்டு செல்வதற்கான பணிகளை பல்வேறு அமைப்புகள் உலகம் முழுவதும் செய்துவருகின்றனர்.

இணையம், ஹாம் வானொலிக்கு ஒரு வரப்பிரசாதம். ‘ஹாம் ஸ்டடி  (ஷ்ஷ்ஷ்.லீணீனீstuபீஹ்.ஷீக்ஷீரீ) என்று ஒரு இணைய தளம், நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தே ஹாம் தேர்வுக்கு தயாராக பல்வேறு பயிற்சிகளை வழங்குகிறது. குறிப்பாக நீங்கள் எந்தத் தேர்வை எழுத விரும்புகிறீர்கள், அதற்கான பாடத்திட்டம் என்ன? அதற்கான புத்தகங்களை எங்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்? போன்ற பல்வேறு விபரங்கள் இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு, டெக்னிக்கல் தேர்வு மற்றும் அட்வான்ஸ் தேர்வுகளுக்கு எப்படி தயாராவது? இந்த தேர்வுகளில் எது மாதிரியான கேள்விகள் கேட்கப்படும்? போன்ற விபரங்களும் இந்த ஹாம் ஸ்டடி இணையதளத்தில் கிடைக்கிறது.

ஹாம் வானொலி பற்றி ஒன்றுமே அறியாதவர்கள் கூட இந்த தளத்திற்கு வந்து ஹாம் வானொலிப் பற்றிய அடிப்படை கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்து கொண்டு செயல்படலாம். ஹாம் வானொலி உரிமம் வாங்குவதற்கு ஏன் ஒரு சிலருக்கு பல சிரமங்கள் ஏற்படுகிறது? அவற்றை எப்படி தவிர்க்கலாம்? மாதிரி வினாத்தாள்கள் எங்கு கிடைக்கும் போன்ற விபரங்களும் இந்த ஷ்ஷ்ஷ்.லீணீனீstuபீஹ்.ஷீக்ஷீரீ இணையதளத்தில் கிடைக்கிறது.

ஒரே புத்தகம்

ஹாம் வானொலிக்காக தமிழகத்தில் இருந்து வெளியான ஒரே ஆங்கில புத்தகம் பிணீனீ ஸிணீபீவீஷீ எனும் புத்தகமாகும். ஹாம் வானொலியை மையப்படுத்தி எழுத இந்திய அளவிலேயே பலரும் தயங்குகின்ற நேரத்தில் தனது சொந்த முயற்சியில் சேலத்தில் இருந்து ஒருவர் ஆங்கிலத்தில் ஹாம் வானொலிக்காக ஒரு புத்தகம் எழுதுவது என்பது ஒரு பெரிய விடயம். அதுவும் 1992&ல் இந்தப் பணியை செய்திருப்பது, பாராட்டுதலுக்குரியது. இன்றும் இது போன்ற பணியை எடுத்து செய்வதற்கு யாரும் தயாராக இல்லை. அதற்கு பல காரணங்கள். குறிப்பாக 1000 பிரதிகளை அச்சடித்து வைத்துக் கொண்டு, யாரேனும் வாங்கமாட்டார்களா? என்ற ஏக்கத்தில் இருக்கும் போது, யார் எழுத முன்வருவார்கள்.

நானே பல ஹாம் சந்திப்புகளிலும், ஹாம் திருவிழாக்களிலும், ?து போன்று புத்தகங்களை அச்சடித்து விற்பனைக்கு வைத்திருப்பவர்களை பார்த்திருக்கிறேன். யாரும் இந்த பக்கம் வந்து புத்தகத்தினை வாங்க மாட்டார்களா? என்ற ஏக்கத்தில் தனியாக அமர்ந்திருப்பார்கள். ஹாம் வானொலித் தொடர்பான புத்தகம் இந்தியாவில் கிடைப்பதில்லை என்று ஏக்கப் பெருமூச்சு விடுபவர்கள் கூட, ஒரு சேர ஒரு பத்து பிரதிகளை வாங்கி ஹாம் சமுதாயத்திற்கும், புத்தகம் விற்பவருக்கும் ஒரு உதவி செய்வோமே என்று எண்ண மாட்டார். இன்னும் சொல்வதானால், அவர் அமர்ந்திருக்கும் இடத்தின் அருகில் கூட வரவே மாட்டார். இப்படித்தான் இன்று ஹாம் வானொலிக்கான புத்தகங்களின் விற்பனையும், ஹாம் வானொலிப் பற்றி எழுதுபவர்களின் நிலைமையும் உள்ளது.

க்ஷிஹி2கிறிஷி எனும் கால் சைன் கொண்ட பேரா..பொன்னுசாமி அவர்களால் எழுதப்பட்ட இந்த புத்தகம் ஆர்.பார்திபன் (க்ஷிஹி2றிறிஙி) அவர்களோடு இணைந்து 2005&ல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்தது. இதில் செயற்கைக்கோள் தொடர்பியல், ஃபீல்ட் எபெக்ட் டிரான்ஸிஸ்டர், பைபோலார் ஜங்சன் டிரான்ஸிஸ்டர் மற்றும் அன்ஜங்சன் டிரான்ஸிஸ்டர் போன்றவற்றை பற்றிய விளக்கங்களை புதிதாக புத்தகத்தில் இணைத்துள்ளார். சேலம் ஹாம் வானொலி மன்றத்தினர் பலரும் இந்த புத்தகத்தினை எழுதுவதற்கு பெரிதும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

எலக்ட்ரானிக்ஸ் சட்டதிட்டங்கள், மோர்ஸ் கோட், ஹாம் தேர்வுக்கான பாடதிட்டம், செமிகண்டன்சர்கள், வால்வுகள், காந்தபுலம், ஆண்டனா, ஒலி வாங்கிகள், அலைவரிசைகளின் விபரங்கள், பொதுவான கேள்விகள், க்கியூ கோட்கள், எமிசன் சட்டங்கள், இந்திய வயர்லெஸ் டெலிகிராப் ஆக்ட் பற்றிய விபரங்கள், மாதிரி வினாத்தாள்கள், ஹாம் தேர்வினை எழுதுபவர்களுக்கான விண்ணப்ப படிவம், கிளப் ஸ்டேசன் விண்ணப்ப படிவம், தேர்வு கட்டண விபரங்கள், மாணிட்டரிங் ஸ்டேசன் முகவரிகள், வெளிநாடுகளில் இருந்து ஹாம் வானொலிப் பெட்டி இறக்குமதி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்? எனப் பல்வேறு பயனுள்ள விபரங்கள் இந்த 164 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் அடக்கியுள்ளார் ஆசிரியர் பொன்னுசாமி. ரூ. 55க்கு விற்பனைக்கு கிடைக்கும் இந்த புத்தகத்தினை பிரைட் பப்ளிசர்ஸ், 131/1, (477/1), அங்கம்மாள் காலனி, சேலம்  636 009 எனும் முகவரிக்கு எழுதி பெற்றுக்கொள்ளலாம்.

தேர்வுக்காக ஒரு செயலி

ஹாம் வானொலித் தேர்வுகளை எழுதுவது இன்று எளிதாகிவிட்டது. அதற்காக பல்வேறு செயலிகள் தற்பொழுது நம் கைப்பேசியிலேயே பதிவிறக்கம் செய்து படித்துக்கொள்ள கிடைக்கிறது பிணீனீ ஸிணீபீவீஷீ ணிஜ்ணீனீ ஜீக்ஷீமீஜீணீக்ஷீணீtவீஷீஸீ திஸிணிணி எனும் மென்பொருள். 450க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கேள்விகள், 700க்கும் மேற்பட்ட பொதுவான கேள்விகள் இதில் உள்ளது.

வழக்கமான செயலிகளில் பார்த்து படிக்க வேண்டும், இதில் நீங்கள் படிக்க நேரம் இல்லாவிட்டாலும், வேறு வேலைகளை செய்து கொண்டே கேட்டுக்கொள்ளும் வசதியை கொடுக்கிறது இந்த செயலி. நீங்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு குரல் வழியாகவே பதிலும் கிடைக்கிறது.

நீங்கள் படிக்கும், கேட்கும் அனைத்து தகவல்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், மின் அஞ்சல் வழியாக யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பி கொள்ளலாம். தேர்வுக்கு தயார் என நீங்கள் நினைத்தால், இவர்களே மாதிரி தேர்வினை வைக்கின்றனர்.

ஒரு முறை பதிவு இறக்கம் செய்து கொண்டால் போதுமானது, அதன் பின் இணைய வசதி இல்லாத போதும் படித்துக்கொள்ளலாம். ஒரு சில புரியாத பாடங்களை எளிதில் படத்துடன் விளக்கம் கொடுத்துள்ளது இந்த செயலியின் மற்றும் ஒரு சிறப்பு.

மார்கஸ் (ஞிலி8விஸிணி) அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த பிணீனீ ஸிணீபீவீஷீ ணிஜ்ணீனீ ஜீக்ஷீமீஜீணீக்ஷீணீtவீஷீஸீ திஸிணிணி  கைப்பேசி செயலி 15.6 எம்.பி. அளவு கொண்டது. தற்சமயம் ஐபோன்னுக்கு மட்டுமே கிடைக்கிறது. விரைவில் ஆண்டிராய்ட் செயலிகளுக்குமான பதிப்பினை வெளியிட உள்ளார் மார்க்ஸ்.

கேட்போம்

(கட்டுரையாளர்உலக வானொலிகள்நூலின் ஆசிரியர், தொடர்புக்கு ணீக்ஷீபீவீநீபீஜ்நீறீuதீ@ஹ்ணீலீஷீஷீ.நீஷீ.வீஸீ)